திருவொற்றியூரில் மாநில அளவில் தொடுமுறை சிலம்பப் போட்டி

திருவொற்றியூரில் மாநில அளவில் தொடுமுறை சிலம்பப் போட்டி

திருவொற்றியூரில் மாநில அளவிலான விடுமுறை சிலம்பப் போட்டி தொடங்கியது

திருவெற்றியூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் யுத்த வர்ம சிலம்ப போர்க்கலை அக்கடமி விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவில் வீரர்கள் கலந்து கொள்ளும் சிலம்ப போட்டி நடைபெற்றது

இது குறித்து இந்த அமைப்பின் நிறுவனர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது பாரம்பரிய முறைப்படி வீரத்தை வெளிப்படுத்தும் முறையில் அந்த காலத்தில் சிலம்பத்தின் முகப்பில் சுண்ணாம்பு அல்லது மை வைத்து வைத்திருப்பார்கள் எதிரியின் மீது எத்தனை மை வைக்கப்படுகிறதோ அதற்கு ஏற்ப பாயிண்டுகள் வழங்கி விருதுகள் வழங்கப்படும் தற்போது நவீன முறைப்படி சிவப்பு நீல கலர்கள் சிலம்பு கம்பத்தில் பூசப்படுகிறது பாதுகாப்பாக வீரர்கள் களத்தில் இறக்க படுகின்றனர் எதிராளி மீது எத்தனை மை அடையாளங்கள் வைக்கப்படுகிறதோ அதற்கு ஏற்ப அவர்களுக்கு பாயிண்ட் வழங்கப்படும் இதற்காக 14 முதல் 16 வயது உள்ள மாணவர்கள் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இன்று நடைபெறுகிறது முதல் பரிசாக ரூபாய் 10,000 இரண்டாம் பரிசாக ரூபாய் 5000 மூன்றாம் பரிசாக 2500 4 பேருக்கு ஆறுதல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது தமிழக அரசு சிலம்பாட்டக் கலைக்கு தற்போது மிக முக்கியத்துவம் கொடுத்து வருவதால் பலர் மிக ஆர்வமாக இந்த விளையாட்டில் கலந்து கொள்கின்றனர் தகுதியான திறமையான வீரர்கள் மட்டுமே இந்த போட்டியில் தற்போது கலந்து கொள்கின்றனர் இந்த போட்டியை தொழிலதிபர் ஆர்.சி ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகி கணேசன் டாக்டர் ராஜ்குமார் ஏ சி எல் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

Sports