ச

சென்னை, ஜூன் 18, 2025: சென்னை மயிலாப்பூரில் உள்ள சென்னை சமஸ்கிருதக் கல்லூரி (Madras Sanskrit College) புதன்கிழமை (ஜூன் 18) தனது வளாகத்தில் நான்கு புதிய நிறுவனங்களை பெருமையுடன் திறந்துள்ளது. அந்நிறுவனங்கள் நான்கும் பாரதிய மேம்பாட்டு மையத்தின் (Bharatiya Center for Excellence-ன்) அங்கங்களாக துவக்கப்பட்டுள்ளன. பாரதிய மேம்பாட்டு மையமாவது உலகத்தில் வளர்ந்து வரும் அறம்சார் தேடலுக்கும், வாழ்வியல் வழிகாட்டலுக்குமாக ஒரு துலைநோக்கு முயற்சி.
முக்கியமான அத்தியாயத்த்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, சென்னை் சமஸ்கிருதக் கல்லூரியும் குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனமும் (கே.எஸ்.ஆர்.ஐ) சமஸ்கிருத புலமை மற்றும் பாரதிய ஞான அமைப்புகளின் (பி.கே.எஸ்) கோட்டைகளாக இருந்து வருகின்றன. வேதாந்தம், ஆயுர்வேதம், கணிதம், ஜோதிடம், இதிகாசம் மற்றும் தர்மசாஸ்திரம் முதலிய துறைகளைப் பாதுகாத்தல், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செய்தல் ஆகியவற்றில் இந்ந்றுவனங்கள் இழைந்தன என்பது தெரிந்ததே. இந்தப் பண்டைய கல்வி பரம்பரை நிகழ்காலத்தின் தேவைப்படும் ஒப்பற்ற நெறிமுறைகளாகவும், அறிவுசார் எதிர்காலத்திற்கான வலிமையான அடித்தளமாகவும் இருக்க அமைந்தவை. அவைகளின் வளம் இக்காலத்திலும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. அவைகளால் ஆக வேண்டிய பயன்கள் இன்றைக்கும் பல உள்ளன.
தொலைநோக்குடைய இக்கல்லூரியின் தலைமையின் உந்துதலில், ஆழ்ந்த சிந்தனைக் கொண்ட அறிஞர்ளின் வழிகாட்டுதலில் துவக்கப்பட்ட இந்த பாரதிய மேம்பாட்டு மையம் பண்டைய ஞானத்தைக் கொண்டு நவீன சவால்களைச் சந்திக்கவும், உறுதியான மதிப்பை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்ட புதிய முயற்சியாகும்.
●இன்று தொடங்கப்பட்ட வேத பாடசாலை மற்றும் பாரதிய வித்யாலயா ஆகியவை இந்த பாரதிய மேம்பாட்டு மையத்தின் ஒரு பகுதியாகும். இந்தப் பள்ளிகள் பண்டைய மற்றும் நவீன அறிவை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த, அறம் சேர்ந்த கல்வியைக் கொண்டு எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும்.

