தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு பட்டினிப் போராட்டம்

தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு பட்டினிப் போராட்டம்

அரசு பள்ளிகளே அமைந்திராத தமிழ்நாட்டின் பலவேறு பகுதிகளில் மக்களுக்கான இலவசக் கல்வியையும் அரசின் நலத் திட்டங்களையும் மக்களுக்கு அளித்து வருவது அரசு உதவி பெறும் பள்ளிகளே சமூக பொருளாதாரத்தில் சம நிலையில் உள்ள . அரசு பள்ளி மாணவர்களையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் வேறுபடுத்திப் பார்ப்பது . திமுக வலியுறுத்தி வரும் சமூகநீதிக் கொள்கைக்கு எதிரானது என்றே நாங்கள் கருதுகிறோம்.

குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கொண்டுவரப்பட்ட NEET தேரவு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பு மற்றும் அச்ச உணர்விலிருந்து நிவாரணம் அளித்திட ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் குழுவின் பரிந்துரை அடிப்படையில் அரசாணை எண் 438 நாள் 29.10.2020 பிறப்பிக்கப்பட்டது அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கும், சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும் பொருத்தம் வகையில் 75 % இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது . மேற்குறிப்பிட்ட அரசாணையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சேர்க்கப்படாதது அனைத்து தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதனை உணர்ந்த திராவிட முன்னேற்ற கழகம் . 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் பக்கம் 48-49 பத்தி 332- ல் மேற்காண் இட ஒதுக்கீட்டினை 10 % ஆக உயர்த்தி அதில் 2.5 % அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடாக வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது.

பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னரும் இத்தேர்தல் கால வாக்குறுதி . நிறைவேற்றப்படாத நிலை தொடர்கிறது . எனவே மாணவர்களுக்கான இந்த ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து , ஒத்த கருத்துள்ள அனைத்து தரப்பினரின் ஆதரவுடன். மாநிலம் தழுவிய பட்டினிப் போராட்டம் நடைபெற்றது

District News