உடலுறுப்பு தானம் குறித்த கட்டுக் கதைகள் மற்றும் தவறான புரிதல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருதல்

உடலுறுப்பு தானம் குறித்த கட்டுக் கதைகள் மற்றும் தவறான புரிதல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருதல்

உடலுறுப்பு தானம் குறித்த கட்டுக் கதைகள் மற்றும் தவறான புரிதல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருதல்  

Dr. கார்த்திக் மதிவாணன், திட்ட இயக்குனர்: லிவர் மற்றும் மல்டி ஆர்கன் மாற்று அறுவை சிகிச்சை, MIOT மருத்துவமனை 

உறுப்பு மாற்று சிகிச்சைக்கான காத்திருப்போர் பட்டியலில் தற்போது மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெற்றிருக்கிறார்கள், இதில் மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால் பொருத்தமான உறுப்புக்காக  காத்திருப்பவர்கள் மத்தியில், வாழ்வதற்கான இரண்டாவது வாய்ப்பைப் பெறமுடியாமல் இருக்கும் பலரில், தினசரி குறைந்த பட்சம்  20 பேர் உயிரிழக்கிறார்கள். ஒரு பரந்த அளவில் நிலவுகின்ற  உறுப்பு தானம் குறித்த  தவறான புரிதல்கள் மற்றும் தவறான நம்பிக்கைகள் உறுப்பு தான கொடையாளிகளுக்கான அவசர தேவைகளை இன்னும் அதிகளவில் சிக்கலாக்குகின்றது. தகவலளிக்கப்பட்ட முடிவுகளை மேற்கொள்ள, உண்மைக்கும் பொய்க்கதைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளவேண்டியது  மிகவும் முக்கியமான ஒன்று 

 உடலுறுப்பு தானம் குறித்த உண்மைத் தன்மையை மேலும்  சிறப்பாக புரிந்து கொள்ள இப்போது நாம் அதை தீவிரமாக  ஆராய்வதின் மூலம்  இந்த கட்டுக்கதைகளை உடைத்தெறிவோம் 

பெரும்பாலான மக்கள் அவர்களுக்கு இருக்கக்கூடிய உடல் நலப் பிரச்சினைகள் ஒரு உடலுறுப்பு அல்லது திசுக்கள் கொடையாளியாக இருப்பதற்கு தடையாக இருக்கும் என்று நம்புகிறார்கள். இருப்பினும் உண்மை என்னவென்றால், ஒரு சில மருத்துவ உடல்நலக் குறைபாடுகளே   கொடையாளியாக விரும்பும் ஒருவரை முழுமையாகத்  தடை செய்யும். நமது உடலிலுள்ள ஒரு சில உறுப்புக்கள் பயன்தரத்தக்கதாக இல்லாதிருந்தாலும்  இதர உறுப்புக்கள் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு உகந்ததாக இருக்கும். இறப்புக்குப் பின்னர் கொடையளிப்பதற்கான உடலுறுப்புக்கள் மற்றும் திசுக்களின் பொருந்தும் தன்மையை மருத்துவ நிபுணர்களைக் கொண்டு  மதிப்பீடு செய்யவேண்டியது மிகவும் அவசியமாகும். இத்தகைய மதிப்பீடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏனென்றால்,  ஆரோக்கியக் குறைபாடு உடையவர்களும்,  உடலுறுப்பை தானம் செய்வதன் மூலம் மற்றவர்களின் உயிரை காப்பாற்றவும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் முடியும். அரசு கொள்கைக்கு இணையாக, மரணத்திற்கு பிறகு ஒரு மனிதரின் உடலை நன்கொடையாக வழங்கவும் முடியும், இது மரியாதை மற்றும் கண்ணியத்துடன் செய்யக்கூடியது, மேலும் மருத்துவ அறிவியல் மற்றும் கல்விக்கு பங்களிப்புசெய்ய உதவும்.

உடலுறுப்பு தானம் செய்வதில் மற்றொரு பொதுவான தவறான கருத்து வயது சம்பந்தப்பட்டது. சில மக்கள் தங்களுக்கு மிகவும் வயதாகிவிட்ட காரணத்தால் உறுப்பு தானம் தேவைப்படுபவர்களுக்கு அவை பொருந்தாது என்ற தவறான எண்ணத்தில் தாங்கள் உடலுறுப்பை தானம் செய்ய முடியாது என்று நம்புகிறார்கள். இருப்பினும் உடலுறுப்பை தானம் செய்வதற்கு வயது ஒரு தடை கிடையாது. மற்றும் அதற்கான வரையறையும் இல்லை.. இதில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவது அந்த உறுப்பின் ஆரோக்கியம் மற்றும் செயல்திறன் மட்டுமே அல்லாமல் கொடையாளியின் வயது கருத்தில் கொள்ளப்படாது. ஒருவரின் வயது 70 அல்லது அதற்கும் மேலாக இருந்தாலும் தானம் வழங்கும் சந்தர்ப்பத்தில்  அவர்களது உறுப்புக்கள் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் அப்போதும் அந்த உறுப்புக்கள் மூலம்  உயிர்களைக் காப்பாற்ற முடியும் 

உறுப்பு மாற்ற சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டால், மருத்துவ அலுவலர்கள்  தங்களது உயிரை காப்பாற்றுவதற்கு போதுமான அளவு கவனம் செலுத்தமாட்டார்கள் என்ற பய உணர்வுதான் ஒரு சில மக்களிடையே நிலவும் குறிப்பிடத்தக்க கவலையாகும். இது ஒரு அப்பட்டமான கட்டுக்கதை. மருத்துவ நிபுணர்கள் ஒரு தலை சிறந்த மேம்பட்ட மருத்துவப் பராமரிப்பை வழங்குவதற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் மற்றும் ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்ற தேவையான அனைத்தையும் மேற்கொள்வார்கள். ஒரு நோயாளியை குணப்படுத்த  தேவையான அனைத்து உயிர்காக்கும் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு அவை பயனளிக்காமல் போகும் நிலையில்தான் உறுப்பு மாற்று சிகிச்சை கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதில் எந்த ஒரு கட்டத்திலும் உயிரைக் காப்பாற்றுவதற்குத்தான் எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் மற்றும் நோயாளியைக்  காப்பாற்றுவதற்கு வேறு எந்த ஒரு மாற்று வழிமுறைகளும் இல்லை என்ற நிலையில்தான் உடலுறுப்பு தானத்திற்கான முடிவு எடுக்கப்படும். 

உடலுறுப்பு கொடையாளிக்காக காத்திருப்போர் பட்டியலில் செல்வந்தர்கள் அல்லது புகழ்பெற்ற நபர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பது பெரும்பாலோனோர் மத்தியில் பரவலாகக் காணப்படும் மற்றொரு கட்டுக்கதையாகும்.  இத்தகைய தவறான புரிதல்கள் உடலுறுப்பு ஒதுக்கீடு செய்யும் அமைப்பின் மீது நம்பிக்கையின்மையை தோற்றுவிக்கும். இருப்பினும் உடலுறுப்பு தான நடைமுறைகள் நியாயமாகவும் சமத்துவத்துடனும் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு அவை கடுமையான ஒழுங்குமுறை விதிகளால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டு நடைமுறைகள்,  மருத்துவத் தேவை, இணக்கமாக பொருந்தும் தன்மை, மற்றும் அவசரகால தேவை, ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருக்குமே தவிர, ஓர் நபரின் சமூக அல்லது பொருளாதார நிலை சார்ந்த அடிப்படையில் எப்போதும் இருக்காது. உறுப்புக்களின் ஒதுக்கீட்டு நடைமுறைகள்,  நியாயமாகவும் ஒரு தனிமனிதரின் செல்வம் அல்லது புகழ் போன்ற எந்த ஒன்றையும் பொருட்படுத்தாத வகையிலும்  இருப்பதை உறுதி செய்ய கணினிமயமாக்கப்பட்ட ஒரு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது 

இறுதியாக, உறுப்பு தானம் செய்வது கொடையாளியின் குடும்பத்துக்கு நிதி தொடர்பான சுமையை அளிக்கும் என்ற கவலை இருக்கிறது.  இது உண்மையல்ல. தானம் வழங்கும் நடைமுறைகளின் பொது, கொடையாளியின் குடும்பத்தினருக்கு எந்த ஒரு செலவும் இருக்காது. உறுப்பு தானம் தொடர்பான அனைத்து செலவுகளையும் உறுப்புதானம் பெறும்,ஆரோக்கியப் பராமரிப்புக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்படும். கூடுதலாக, உறுப்பு கொடையாளியாக பதிவு செய்த பிறகு, தங்களின் முடிவை மாற்றிக்கொள்ள முடியாது என்ற ஒரு தவறான கருத்து மக்களிடையே நிலவக்கூடும், ஆனால் இதுவும் ஒரு தவறான எண்ணம்தான்.  எந்த ஒரு தனிநபரும் தங்கள் பதிவை எந்த ஒரு நேரத்திலும் விலக்கிக் கொள்ளலாம்.  உறுப்பு கொடையாளிகளுக்கான அத்தியாவசியத் தேவை குறிப்பாக பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்ப்ட்டிருக்கும், இந்தியா போன்ற நாடுகளில்,  கண்கூடாகத் தெரியும் ஒன்று மற்றும் உறுப்பு மாற்று ஒவ்வொரு நாளும் சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளில் பலர் மரணத்தைத் தழுவுகிறார்கள். உறுப்பு தானம் என்பது கொடையாளியின் வயது, உடல்நிலை, அல்லது சமூக அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாதவகையில் மனித உயிர்களை காக்கும்     ஆற்றல் மிக்க ஒரு செயல்பாடாகும். 

Disclaimer 

டிஸ்கிளைமர்: இந்த தகவல் ஒரு தகுதிவாய்ந்த சுகாதார நிபுணர் வழங்கியதாகும். ஆனால், உறுப்பு தானம் அல்லது மாற்று சிகிச்சை பற்றி முடிவு எடுக்கும் முன், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுடன் கட்டாயமாக ஆலோசிக்க வேண்டும்.

Health