பரம்பரை முடி உதிர்தலுக்கு எக்சோசோம் அடிப்படையிலானதீர்வு வழங்க சென்னையில் டாக்டர் பத்ரா’சின் அதிநவீன எக்சோஜென் சிகிச்சை அறிமுகம்

பரம்பரை முடி உதிர்தலுக்கு எக்சோசோம் அடிப்படையிலானதீர்வு வழங்க சென்னையில் டாக்டர் பத்ரா’சின் அதிநவீன எக்சோஜென் சிகிச்சை அறிமுகம்

சென்னை, செப்டம்பர் 26, 2024: உலக அளவில் ஹோமியோபதி மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் டாக்டர் பத்ராஸ் ஹெல்த்கேர், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான முடி உதிர்வு பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கவும் பரம்பரை முடி உதிர்தலுக்கு எக்சோசோம் அடிப்படையில் சிறந்த சிகிச்சை அளிக்கவும் இந்தியாவின் முதல் மற்றும் உலகின் அதிநவீன ‘எக்சோஜென்’ என்னும் சிகிச்சை முறையை சென்னையில் இன்று அறிமுகம் செய்தது.

இந்த புதிய சிகிச்சை முறை பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் சக்திவாய்ந்த மருத்துவ முறையை பயன்படுத்தி பரம்பரை முடி உதிர்வு தடுக்கப்படுவதோடு, இதற்கான பலன் மூன்று மாதங்களில் தெரியும் என்றும் இம்மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த அதிநவீன புதுமையான சிகிச்சையானது மருத்துவத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் முடி மறுசீரமைப்பு மற்றும் செல் மீளுருவாக்கம் என்னும் செல்கள், திசுக்கள், உறுப்புகள் அல்லது முழு உடல் பாகங்களையும் மாற்றும் அல்லது புதுப்பிக்கும் செயல்முறையை குறிக்கிறது.

எக்சோசோம் சிகிச்சையானது முடி உதிர்தலுக்கு இயற்கையான மற்றும் அதிநவீன அணுகுமுறையை வழங்குகிறது, இது முடி மறுசீரமைப்பின் அறிவியலையும் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது. பல்வேறு செல்லுலார் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் எக்சோசோம்கள் இந்த சிகிச்சையின் அடித்தளமாக செயல்படுகின்றன. வளர்ச்சி காரணி நிறைந்த எக்சோசோம்களின் வெளியீட்டில் இந்த செயல்முறை தொடங்குகிறது, அவை உச்சந்தலை பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன, அங்கு அவை பாதிக்கப்பட்ட முடி செல்களைக் கண்டறிந்து அவற்றை சரி செய்கின்றன. அங்கு எக்சோசோம்கள் மயிர்க்கால் ஸ்டெம் செல்களை செயல்படுத்தி, செல்லுலார் மீளுருவாக்கத்தை ஊக்குவிக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் பத்ராஸ் ஹெல்த்கேர் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குனரும், லண்டன் ட்ரைக்கோலாஜிக்கல் சொசைட்டியின் முதல் இந்தியத் தலைவருமான டாக்டர் அக்ஷய் பத்ரா கூறுகையில்,  முடி உதிர்தல் பிரச்சினை இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது, இது நம்பிக்கை இழப்பு, மனச்சோர்வு போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது. வழுக்கையின் ஆரம்பம் 21 ஆண்டுகளாக குறைந்துள்ளது என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகிறது, மற்றொரு ஆய்வு 50 சதவீத ஆண்கள் மற்றும் 22 சதவீத பெண்கள் முறையே வழுக்கையால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கிறது, இந்த பிரச்சினையை  தீர்க்க, முடி மறுசீரமைப்பின் எதிர்காலத்தைக் குறிக்கும் ஒரு சிறந்த சிகிச்சையான எக்சோஜென் சிகிச்சையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எக்சோசோம் தெரபி என்பது ஒரு அதிநவீன கண்டுபிடிப்பு ஆகும், இது பரம்பரை முடி உதிர்தலுக்கு பாதுகாப்பான, இயற்கையான மற்றும் மிகவும் பயனுள்ள தீர்வை வழங்க மீளுருவாக்கம் செய்யும் அறிவியலின் ஆற்றலைப் பயன்படுத்துகிறது.

நவீன அறிவியல் தொழில்நுட்பத்தை மருத்துவத்துடன் இணைப்பதில் நாங்கள் கவனமுடன் செயல்படுகிறோம். அதற்கு ஒரு சிறந்த சான்றாக எங்களின் புதிய எக்சோஜென் சிகிச்சை உள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர். அக்ஷய் பத்ராவுடன், இக்குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் முகர்ஜி மற்றும் டாக்டர் பத்ராஸ் குழும நிறுவனங்களின் மூத்த வழிகாட்டியான டாக்டர் மது வெங்கடேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.எக்சோஜெனில் காணப்படும் எக்சோசோம் அடிப்படையிலான சூத்திரம் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, எக்சோசோம்கள் புதிய ரத்த நாளங்களின் உருவாக்கத்தைத் தூண்ட உதவுகின்றன, இது ஆஞ்சியோஜெனெசிஸ் என அழைக்கப்படுகிறது, இது ரத்த ஓட்டம் மற்றும் மயிர்க்கால்களுக்கு ஊட்டச்சத்து வினியோகத்தை மேம்படுத்துகிறது, மேலும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

இயற்கையான சிகிச்சை முறைகளுக்கான சிறந்த மருத்துவமனையாக அறியப்படும் டாக்டர் பத்ராஸ், நீண்ட காலத்திற்கு முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதே வேளையில், பரம்பரை முடி உதிர்தலுக்கான புதுமையான மற்றும் பாதுகாப்பான தீர்வுகளை வழங்க புதிய எக்சோஜென் சிகிச்சையை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Launch