இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் உடன் கை கோர்த்த சிம்ஸ் மருத்துவமனை!

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் உடன் கை கோர்த்த சிம்ஸ் மருத்துவமனை!

பக்கவாத விழிப்புணர்வை (Stroke Awareness) அதிகரிக்க முன்னாள்  இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் உடன் கை கோர்த்த சிம்ஸ் மருத்துவமனை!

சென்னை – அக்டோபர் 29.2024 . சிம்ஸ் மருத்துமனை வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப நோய்களை தடுக்க பல்வேறு ஆரோக்கிய செயல்முறைகளை விழிப்புணர்வூட்டும் வகையில்  முன்னெடுத்து வருவதை அறிவோம். அந்த வகையில்  பக்கவாத விழிப்புணர்வு தினத்தை கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய கிரிக்கெட்  தினேஷ் கார்த்திக் சிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் பக்கவாத பாதிப்புக்கு பிறகு உயிர் பிழைத்தவர்கள், சுகாதார நிபுணர்கள் மற்றும் 20 கார்ப்பரேட் குழுவின் பணியாளர்கள் உட்பட  பலதரப்பட்ட தனிநபர்களை குழுவாக இணைத்து பக்கவாத விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில்  வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்கும் விதமாக ‘Strike Against Stroke’ கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.  இதில் கார்ப்பரேட் அணிகள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் இருவேறு அணிகளாக மோதிக்கொண்டனர். நட்பு ரீதியாக இந்த போட்டி நடத்தப்பட்டது. மகிழ்ச்சியுடன் களமிறங்கிய இப்போட்டியின் முடிவில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) வெற்றி பெற்றது. மேலும்  ஈக்விடாஸ்  ஸ்மால் ஃபைனான்ஸ்   பேங்க் (Equitas Small Finance Bank) முதல் ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டது.  பிரேக்ஸ் இந்தியா (Brakes India)  இரண்டாவது ரன்னர் -அப் ஆக தேர்வு செய்யப்பட்டது. 

இந்த போட்டியானது தனித்துவமான  முன்முயற்சியாக உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு  விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் கொண்டாடப்பட்டது.   மேலும் பக்கவாதத்தை தடுக்க சுறுசுறுப்பாக உடல் ரீதியாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் இவை உணர்த்தியது. 

ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு விழிப்புணர்வை அளிக்கும் வகையில் செயல்பட்ட இந்த நிகழ்ச்சி குறித்து முன்னாள்  இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பக்கவாதம் தடுப்பு நிகழ்ச்சி விழிப்புணர்வை ஒட்டிய இந்த பங்கேற்பில் தானும் ஒரு பகுதியாக இருப்பது பெருமை அளிப்பதாக கூறினார். மேலும் பக்கவாதம்  உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதித்து பேரழிவு அளிக்க கூடியது. ஆனால் ஆரோக்கியமான உடல் செயல்பாடு மற்றும்  உடல் தகுதியை தொடர்ந்து நிர்வகிப்பதன் மூலம் இந்த பக்கவாதத்தை தடுக்க முடியும். அதனால் அனைவரும்  ஆரோக்கியமான  வாழ்க்கை முறையை  கடைப்பிடிக்க வேண்டும். மேலும் பக்கவாத அறிகுறிகள்  ஏதேனும் தெரிந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 

டாக்டர் ரவி பச்சமுத்து, SRM குழுமத்தின் தலைவர்.

சிம்ஸ் மருத்துவமனை மருத்துவ சிகிச்சையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக சிகிச்சை செய்து உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிப்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது. அந்த வகையில்  பக்கவாத அறிகுறிகள் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களது வாழ்க்கைத்தரத்தை மீட்டெடுத்துள்ளோம்.  மேலும் பக்கவாத விழிப்புணர்வு தினத்தில்  தினேஷ் கார்த்திக் அவரது ஆதரவிற்காகவும், பக்கவாதத்திலிருந்து உயிர் பிழைத்தவர்களது இதயங்களில் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க செய்த நிலையில் அவருக்கு  எப்போதும் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

Health