குழந்தைகள் தினத் தில் உதவும் முகம் அறக்கட்டளை சார்பில் சிலம்பம் மற்றும்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு
சென்னை மாதவரம் மாத்தூர் பகுதியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உதவும் முகம் அறக்கட்டளை சார்பாக மாநகராட்சி பூங்காவில் 3 முதல் 15 வயது சிறுவர்கள் சிறுமியர்கள் சிலம்பாட்டம் போட்டி ஞாயிறுஅன்று அரசு டிவி நிறுவனரும் வெளிச்சம் இதழ் ஆசிரியரும் ஆல் இந்தியா அட்வகேட் ஜெனலிஸ்ட் பொதுச்செயலாளர் சி.பெஞ்சமின் துவக்கி வைத்தார்மிக
விமர்சையாக போட்டிகள் நடைபெற்றன அதனைத் தொடர்ந்து
தமிழகத்தில் சிறு வயதிலேயே சிறுவர்கள் சிறுமியர்கள் செல்போன் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்
இதனால் அவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்து கண்
பார்வைபாதிக்கப்
பட்டு அவர்களுடைய எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது என்பதைவிழிப்புணர்வுநிகழ்ச்சிமூலம்எடுத்துரைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குழந்தைதினமான நவம்பர் 14 அன்று சிலம்பம் போட்டி மற்றும் விழிப்புணர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு அறக்கட்டளை சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.
உதவும் முகம் அறக்கட்டளை நிறுவனர் கோ.ரமேஷ் உதவும் முகம் அறக்கட்டளை பொதுச் செயலாளர் எப். செல்வம் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியினை உதவுமுகம்அறக்கட்டளையின்வடசெனனைமாவட்டதலைவர் டி. ரமேஷ் ஏற்பாடு செய்திருந்தார் மேலும் உதவும் முகம் அறக்கட்டளை நிர்வாகிகளும் போட்டியாளர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.