
சென்னையில் மிக பழமையான சபாக்களில் ஒன்றான இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி (Indian Fine Arts Society) சார்பாக இன்று ஸ்ரீ தியாகராஜ ஆராதனை தினம் கொண்டாப்பட்டது.
70க்கும் மேற்பட்ட முன்னணி கலைஞர்கள் இதில் பங்கேற்று ஸ்ரீ தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதிகளை இசைத்தார்கள்.
முன்னதாக ஸ்ரீ தியாகராஜர் அவர்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனை செய்யப்பட்டது. இந்த விழாவில் IFASஇன் தலைவர் திரு கே வீ ராமசந்திரன் மற்றும் திரு. ராதாகிருஷ்ணன், கௌரவ செயலாளர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.