மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவச ஹெப்படைடிஸ் தடுப்பூசி முகாம்: சிம்ஸ் மருத்துவமனையும், தோழி தொண்டு நிறுவன அமைப்பும் இணைந்து நடத்துகின்றன

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவச ஹெப்படைடிஸ் தடுப்பூசி முகாம்: சிம்ஸ் மருத்துவமனையும், தோழி தொண்டு நிறுவன அமைப்பும் இணைந்து நடத்துகின்றன

சென்னை, 29 ஏப்ரல் 2022: உலக தடுப்பூசி மருந்து வாரம் 2022 நிகழ்வையொட்டி, மூன்றாம் பாலின சமூகத்தினரின் நலனுக்காக சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் தோழி அமைப்புடன் ஒருங்கிணைந்து ஹெப்படைடிஸ் பி தடுப்பூசி செலுத்தலுக்கான இலவச முகாமை சென்னையின் பிரபல மருத்துவமனையான சிம்ஸ் (SIMS), சேத்துப்பட்டில் இன்று வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது. இன்று சிறப்பாக நடத்தப்பட்ட இம்முகாம், ஹெப்படைடிஸ் நோய் வராமல் முன்தடுப்பதற்கான அவசர தேவையை வலியுறுத்தியதுடன் அதன் மீதான விழிப்புணர்வு அமர்வையும் நடத்தியது. திருநங்கையர், திருநர் ஆகியோரை உள்ளடக்கிய மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 1000 நபர்களுக்கு இலவசமாக ஹெப்படைடிஸ் பி தடுப்பூசி மருந்துகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் இச்சிறப்பு செயல்திட்டத்தின் 2022 மே 5ம் தேதி வரை சிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும். பிரபல நடிகையும், சமூக செயல்பாட்டாளருமான திருமதி. நமீதா மாரிமுத்து, மற்றும் சிம்ஸ் மருத்துவமனையின் சமூக மருத்துவ துறையின் தலைவர் டாக்டர். பி. குகானந்தம் ஆகியோர் இந்நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
பிரபல நடிகையும், சமூக செயல்பாட்டாளருமான திருமதி. நமீதா மாரிமுத்து, இம்முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது: “இந்த தடுப்பூசி முகாம் நிகழ்வில் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மூன்றாம் பாலின சமூகத்தினருக்காக பயனுள்ள இந்நடவடிக்கையை எடுத்திருக்கும் சிம்ஸ் மருத்துவமனையை நான் மனமார பாராட்டுகிறேன்

Health