கற்றல் மற்றும் சம்பாதித்தல் ” பிரச்சாரத்தின்தின் மூலம் இசை உருவாக்குபவர்களுக்கு IPRS முழுமையான ஆதரவை வழங்குகிறது

கற்றல் மற்றும் சம்பாதித்தல் ” பிரச்சாரத்தின்தின் மூலம் இசை உருவாக்குபவர்களுக்கு IPRS முழுமையான ஆதரவை வழங்குகிறது


சென்னை, 04 May 2022: இந்தியன் பெர்ஃபார்மிங் ரைட் சொசைட்டி லிமிடெட் (“IPRS”) அதன் உறுப்பினர்களின் நலனில் பெரும் அக்கறை கொண்டுள்ளது. இந்நிறுவனம் துவங்கப்பட்ட 1969-ஆம் ஆண்டு முதல் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் உரிமைகளை IPRS பாதுகாத்து வருகிறது திறமையான படைப்பாளிகள் தங்கள் உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய முழுமையான தகவல் கொண்டிராமல் இருப்பது கவலை அளிப்பதாகவும் மற்றும் இந் நிலைமையை சீர் செய்ய எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சிந்திக்க வைத்தது.
காப்புரிமை சங்கமாக IPRS இன் முன்முயற்சி மற்றும் பங்கு குறித்து கருத்து தெரிவித்த புகழ்பெற்ற பாடலாசிரியர், கவிஞர் மற்றும் IPRS உறுப்பினரான ஸ்ரீ வைரமுத்து ராமசாமி கூறுகையில், “IPRS இன் இந் நடவடிக்கையை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் பல வருடங்களாக இத்துறையில் ஒரு அங்கமாக இருந்து வருகிறேன், மேலும் சரியான தகவல் இல்லாததால் பல படைப்பாளிகள் தங்கள் உரிமைகளைப் பெறமுடியாமல் போவனதையும் நான் கண்டிருக்கிறேன்.ஒரு படைப்பாளிக்கு உரிய மதிப்பை வழங்குவது, அவர்கள் மேலும் உயர வழிவகுக்கிறது. இசைத் துறை முன்னேற உதவும் அதே வேளையில், அவர்களின் படைப்பு முயற்சிகளுக்கு முழுமையான பங்கை அளிக்கவும் உதவுகிறது.” என்றார்.

Launch