பட்டியல் பழங்குடி மக்களின் சிறப்பு உட்கூறு திட்டமிடல் நிதி அறிக்கையை புரட்சி தமிழகம் பறையர் பேரவை அமைப்பின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிட்டார்,

பட்டியல் பழங்குடி மக்களின் சிறப்பு உட்கூறு திட்டமிடல் நிதி அறிக்கையை புரட்சி தமிழகம் பறையர் பேரவை அமைப்பின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிட்டார்,

பட்டியல் பழங்குடியின மக்களுக்கு ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களும் இம் மக்களுக்கான வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது பட்டியல் இனதவற்கும் மற்றவருக்கும் உள்ள இடைவெளியை அகற்றுவது, பட்டியலின மாணவர்களின் கல்வி கற்றல் இடைநிலை குறைப்பது, தொட்டில் என குடும்பங்களை வறுமைக் கோட்டில் இருந்து மீட்பது,புதிய 10 அம்ச திட்டங்களை உருவாக்குவது, பட்டியல் இன மக்களிடம் தொழில் முனைவு ஏற்படுத்துவது உள்ளிட்டவைகளை சிறப்பு உட்கூறு திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது,

வருடந்தோறும் தமிழக அரசு போடுகின்ற பட்ஜெட்டில் இருந்து 21 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டு பட்டியல் மற்றும் பழங்குடி மக்களுக்கான சிறப்பு உட்கூறுத் திட்டங்களை போடுவதற்கு நிதி ஒதுக்கப்படுகிறது, நிதி முறையாக செலவு செய்யப்படாமல் சில சமயங்களில் தமிழக அரசால் திருப்பி அனுப்பப்படுகிறது,

ஆனால் அண்டை மாநிலமான கர்நாடகா,ஆந்திரா,கேரளா, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் இதற்கு முறையாக திட்டங்கள் வகுக்கப்படுகின்றன, அப்படி வகுக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த அதிகாரிகளை ஆறுமாதம் சிறையில் வைக்க சட்டமும் இயற்றப்பட்டு இந்த திட்டங்கள் எல்லாம் சிறப்பாக நடைபெறுகிறது,

அதன் அடிப்படையில் ஒரு ஆய்வு செய்து இன்றைக்கு நிழல் பட்ஜெட்டை வெளியிட்டிருக்கிறோம், அந்த மாநிலங்களில் எப்படி இந்த திட்டங்கள் செயல்படுகிறது என சுட்டிக்காட்டி, உள்ளோம்,

எனவே தமிழக அரசு இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முதல் பட்ஜெட்டை கவனம் செலுத்தி அத்தகைய திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்,

இன்றைக்கு பாமக வெளியிட்டிருக்கிற வேளாண்மை நிதிநிலை அறிக்கையை வைத்து சில திட்டங்களை அரசு இன்று எடுத்து நடத்தி வருகின்றது சட்டப்பேரவையில், வேளாண்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார், அதேபோல இந்த ஆய்வறிக்கையை அரசு பரிசீலித்து இதில் உள்ள திட்டங்களை இந்த மக்கள் பயன்பெறும் வகையில் செய்ய வேண்டும்,

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பிஎஸ்சி,பி எ,படிப்புகளில் 4750 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது அதை உயர்த்தி மற்ற மாநிலங்களைப் போல 2200 ஆயிரம் வழங்க வேண்டும், ஆதிதிராவிட நலப் பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது,, ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் மாணவர்கள் சுத்தம் செய்வது கழிப்பறையை கழுவுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது தடுக்க வேண்டும், துப்புரவு பணியாளர்கள் அந்தப் பள்ளியில் போடப்படவில்லை,

அனேக பள்ளிகளில் மிகக் குறைவான ஆசிரியர்கள் உள்ளனர் ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் ஒரு தலைமை ஆசிரியர்கள் என மிகக் குறைவான அளவில் ஆசிரியர்கள் உள்ளதால் மாணவர்களுக்கு பாடம் எடுப்பது சிரமமாக இருக்கும்,

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளிலிருந்து மாணவர்கள் நீட் தேர்வு எழுதி இதுவரை 200 பேர் தேர்ச்சி பெற்று மருத்துவர்களாக ஆகிறார்கள், ஆனால் தமிழகத்தில் இதுவரை ஒரு ஆதிதிராவிட மாணவர்கள் கூட நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை, எனவே ஆதிதிராவிடர் நல துறையிலே அந்த நிதியில் இருந்து அரசு இதை சரி செய்ய வேண்டும்,

District News