நீல சீருடை அணிந்த தேவதைகள்’ என்ற கருப்பொருளுடன் சர்வதேச செவிலியர் தினத்தைக் கொண்டாடும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்

நீல சீருடை அணிந்த தேவதைகள்’ என்ற கருப்பொருளுடன் சர்வதேச செவிலியர் தினத்தைக் கொண்டாடும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்

‘நீல சீருடை அணிந்த தேவதைகள்’ என்ற கருப்பொருளுடன் சர்வதேச செவிலியர் தினத்தைக் கொண்டாடும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்
நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றுவதிலும் மருத்துவர்களுக்கு ஆதரவு சேவை வழங்குவதிலும் அவர்களது நிகரற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் செவிலியர்களுக்கு விருதுகளை வழங்கி ஊக்குவிக்கிறது

சென்னை, மே 12, 2022: நோயாளிகளுக்கான சிகிச்சையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் செவிலியர்கள் மேற்கொள்ளும் கடினமான பணியை தலைவணங்கி மதித்து பாராட்டுவதற்காக ‘நீல சீருடை அணிந்த தேவதைகள்’ (‘Angels wear Blue Scrubs’) என்ற ஒரு சிறப்பு செயல் நடவடிக்கையை சர்வதேச செவிலியர்கள் தினத்தன்று அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC) நடத்தியது. தெற்காசியா மற்றும் மத்தியக்கிழக்கு பிராந்தியத்தில் புற்றுநோய்க்கான முதல் மற்றும் ஒரே புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையைக் கொண்டிருக்கும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர், செவிலியர்களது நேர்த்தியான சேவையை தொடர்ந்து மேற்கொள்ள அவர்களை ஊக்குவிப்பதில் ஆழமான பொறுப்புறுதியை (APCC) கொண்டிருக்கிறது. செவிலியர்களை பாராட்டி, முன்னிலைப்படுத்தி அவர்களுக்குரிய அங்கீகாரங்களையும், விருதுகளையும் வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உத்வேகம் அளிப்பதே இதன் நோக்கமாகும்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர். கனிமொழி என்விஎன் சோமு அவர்கள் தலைமை விருந்தினராகவும் மற்றும் திரைப்பட நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான மிஸ். ஜுலி சிறப்பு விருந்தினராகவும் இந்நிகழ்வில் பங்கேற்று இதனை தொடங்கி வைத்தனர். APCC – ன் மருத்துவ இயக்குனரும் மற்றும் மூளை நரம்பியல் – புற்றுநோயியல் துறைத் தலைவருமான டாக்டர். ராகேஷ் ஜலாலி; அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் – ன் குழும புற்றுநோயியல் மற்றும் பன்னாட்டு செயல்பாடுகள் துறையின் தலைவர் திரு. ஹர்ஷத் ரெட்டி, APCC – ன் தலைமை செயலாக்க அதிகாரி திரு. ஹரிஷ் திரிவேதி மற்றும் APCC – ன் செவிலியர் பிரிவின் தலைமை அதிகாரி சிஸ்டர். லிஜோ தாமஸ் வாழக்கல் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Health