கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் ரத்த வகையால் ஏற்படக்கூடிய தடைக்கு எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவர்கள் வெற்றிகரமாகத் தீர்வு கண்டுள்ளனர்

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் ரத்த வகையால் ஏற்படக்கூடிய தடைக்கு எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவர்கள் வெற்றிகரமாகத் தீர்வு கண்டுள்ளனர்

ஆயிரக் கணக்கானோருக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் புதிய தொழில்நுட்பம்

சென்னை , மே 18 , 2022 : முன்னணி அனைத்து அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் , நுட்பங்கள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர் 45 வயதான நோயாளி ஒருவருக்கு ஒரே ரத்த வகையைச் சாராத உயிருடன் உள்ளவரிடமிருந்து கல்லீரல் தானமாகப் பெற்று வெற்றிகரமாகப் பொருத்தி கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையை செய்துள்ளது 12 மணி நேரம் நடந்த இந்த அறுவைசிகிச்சையை டாக்டர் தியாகராஜன் ஸ்ரீனிவாசன் தலைமையில் டாக்டர்கள் கார்த்திக் மதிவாணன் மற்றும் மயக்கவியல் மூத்த மருத்துவர்கள் டாக்டர் தினேஷ் மற்றும் டாக்டர் நிவாஷ் உள்ளிட்ட மருத்துவர்கள் அடங்கிய குழு செய்துள்ளது .

இது குறித்து அறுவைசிகிச்சையை வெற்றிகரமாகச் செய்த பல்வேறு மருத்துவத் துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை வழிநடத்தியவரும் எம்ஜிஎம் ஹெல்த்கேரின் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மற்றும் எச்.பி.பி அறுவைசிகிச்சை நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் தியாகராஜன் ஸ்ரீனிவாசன் அவர்கள் கூறுகையில் , ” இந்த அறுவைசிகிச்சையானது மாற்று வாய்ப்புக்காகக் காத்திருக்கும் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையை எதிர்நோக்கியிருக்கும் பலருக்கு நம்பிக்கையையும் மிக விரைவாக நலம் பெறுவதற்கான வாய்ப்புக்கும் வழிவகுத்துள்ளது எங்களுடைய குழுவானது பலவகைப்பட்ட ரத்தக்குழுவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட நோயாலிளிகளுக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்த அனுபவத்தைக் கொண்டுள்ளது.

Health