எம்ஜிஎம் ஹெல்த்கேரில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் ‘FALL PREVENTION’ திட்டத்தைத் தொடங்கிவைத்தார்

எம்ஜிஎம் ஹெல்த்கேரில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் ‘FALL PREVENTION’ திட்டத்தைத் தொடங்கிவைத்தார்

சென்னை, 9 ஜூன் 2022: எம்ஜிஎம் ஹெல்த்கேர் இன்று முதியவர்கள் மத்தியில் அதிக அளவில் காணப்படும் தவறி கீழே விழுவதைத் தவிர்க்கும் விழிப்புணர்வுத் திட்டத்தைத் தொடங்கியது. முதியவர்கள் மத்தியில் காணப்படும் தவறி விழுவதைத் தவிர்க்கும் இந்த பிரத்தியேக திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பிரஷாந்த் ராஜகோபாலன், எலும்பு சிகிச்சைத் துறை மூத்த மருத்துவரும் இயக்குநருமான டாக்டர் கோவிந்தராஜ் ஏ.பி ஆகியோருடன் இணைந்து தொடங்கிவைத்தார்.

எம்ஜிஎம் ஹெல்த்கேரின் தவறி விழுவது தடுப்புத் திட்டம், முன்னெச்சரிக்கை செயல்பாடு மற்றும் ஆலோசனைகள் மூலம் முதியவர்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் அடிக்கடி தடுமாறி கீழே விழுவதைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எம்ஜிஎம் ஹெல்த்கேரின் நிபுணர்கள், இந்தத் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட முதியவர்கள் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று, தடுமாறி விழுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்து அவர்களுக்குக் கற்பிப்பார்கள். மருத்துவர்கள் குழு முதியவர்களுக்கு எளிதில் செய்யக்கூடிய வலிமை மற்றும் சமநிலை பயிற்சிகளை (strength and balance training) அளிப்பார்கள். மேலும், அவை டெலிரீஹேபிட்டேஷன் திட்டங்களின் மூலம் எம்ஜிஎம் பிசியோதெரபிஸ்டுகளால் தொலைதூரத்திலிருந்து கண்காணிக்கப்படும்.

இது குறித்து எம்ஜிஎம் ஹெல்த்கேரின் எலும்பு சிகிச்சைத் துறை இயக்குநரும் மூத்த மருத்துவருமான டாக்டர் ஏ.பி.கோவிந்தராஜ் அவர்கள் கூறுகையில், “பெரும்பாலான மக்கள் வயதானால் அடிக்கடி தடுமாறி விழுவது இயற்கையானது என்று கருதுகின்றனர். உண்மையில், தடுமாறி விழுவது இயற்கையானது இல்லை, அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது அதே நேரத்தில் தவிர்க்கக் கூடியதுதான். எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தில் உள்ள நாங்கள் இந்த உண்மைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முதியவர்கள் மற்றும் பராமரிப்பாளர்களை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டத்தை வகுத்துள்ளோம். உடையக் கூடிய எலும்புகள் நோய் (Brittle bone disease), வைட்டமின் டி பற்றாக்குறை நம் சமூகத்தில் பரவலாக உள்ளது. இவை கீழே விழுவதற்கும் எலும்புகள் உடைவதற்குமான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. எங்களின் வலிமையான எலும்பு திட்டமானது இத்தகைய அபாயங்களைக் கண்டறிந்து, இதிலிருந்து விடுபட, பற்றாக்குறை, குறைபாட்டைச் சமாளிக்க உதவும்” என்றார்.

இது குறித்து எம்ஜிஎம் ஹெல்த்கேரின் இயக்குநர் டாக்டர் பிரஷாந்த் ராஜகோபாலன் அவர்கள் கூறுகையில், “உலக சுகாதார நிறுவனத்தின் தவறி விழுதல் தவிர்ப்பு தொடர்பான சர்வதேச ஆய்வறிக்கையானது ஒவ்வொரு ஆண்டும் 28 முதல் 35 சதவிகிதம் வரையில் முதியவர்கள் தவறி விழுந்து பிரச்னைகளை சந்திப்பதாகக் கூறுகிறது. வயது மற்றும் பலகீனம் அதிகரிக்கும் போது தடுமாறி விழும் விகிதமும் அதிகரிக்கிறது. இந்த திட்டமானது மூத்த குடிமக்களுக்கு அவர்களின் உடல் நலம் சார்ந்த பிரச்னைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்குவதன் மூலம் முழுமையான ஆதரவை அவர்களுக்கு அளிக்கும். மூத்த குடிமக்களுக்கான இந்த பிரத்தியேக திட்டத்தை அறிமுகம் செய்வதில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் பெருமிதம் கொள்கிறது” என்றார்.

எம்.ஜி.எம் ஹெல்த்கேர் பற்றிய சிறுகுறிப்பு:

மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை, மிகச்சிறந்த சிகிச்சை அனுபவத்தை நோயாளிகள் பெறவும், நிபுணர்களின் நிபுணத்துவம் வெளிப்படவும், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதிலும் ஆர்வம் கொண்டதாக உள்ளது. உச்சக்கட்ட மருத்துவ பாதுகாப்பை வழங்கும் வகையில் அதிநவீன மருத்துவமனை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. 400 படுக்கைகள், 50 புறநோயாளிகள் ஆலோசனை அறைகள், 100க்கும் மேற்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், 250க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 12 அதிசிறப்பு மையங்கள், 30க்கும் மேற்பட்ட மருத்துவத் துறைகள், 12 அதிநவீன அறுவைசிகிச்சை கூடம், 24 மணி நேரமும் வாரத்துக்கு ஏழு நாளும் விரிவான அவசர சிகிச்சை இங்கு உள்ளது. இங்கே, புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் கவனிப்பு இதனுடன் அதிநவீன தொழில்நுட்பம் இணைந்து நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. எம்.ஜி.எம் ஹெல்த்கேர் உச்சபட்சமான ஆசியாவின் யு.எஸ்.ஜி.பி.சி லீட் பிளாட்டினம் சான்றளிக்கப்பட்ட முதல் பசுமை மருத்துவமனையாகும்.

கடந்த ஆண்டுகளில், எம்.ஜி.எம் ஹெல்த்கேரின் நம்பிக்கை மற்றும் மருத்துவ சிறப்பை நிறுவுவதற்கான முயற்சியில் பல புதுமையான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை மருத்துவ நிபுணர்களின் குழு செய்துள்ளது. எம்.ஜி.எம் ஹெல்த்கேர் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் அதிநவீன கருவிகள் மற்றும் சிறந்த மருத்துவர்களைக் கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Health