ஸ்பார்ட்டன்ஸ் ரைடிங் க்ரூ   பைக்கிங் ஆர்வலர்களுக்கான தனித்துவமான பைக்கிங் குழு உதயம்

ஸ்பார்ட்டன்ஸ் ரைடிங் க்ரூ   பைக்கிங் ஆர்வலர்களுக்கான தனித்துவமான பைக்கிங் குழு உதயம்

சென்னையில் சிறப்பான அறிமுக 
விழா

 சென்னை, 2022 ஜுலை 10 : ஸ்பார்ட்டன்ஸ் 
ரைடிங் க்ரூ (Spartanz Riding Crew) என்ற பெயரில் ஒரு தனித்துவமான பைக்கிங் சமூகக்குழுவின் மாபெரும் 
தொடக்கவிழா இந்தியாவின் முக்கிய 
பெருநகரங்களில் ஒன்றான சென்னை மாநகரில் இன்று மிகச்சிறப்பாக 
நடைபெற்றது. 
நாடெங்கிலுமிருந்து பைக் மற்றும் 
பைக்கிங் ஆர்வலர்களையும் 
ரசிகர்களையும் 
ஒன்றாக ஒருங்கிணைக்கும் 
நிகழ்வாகவும் இது அமைந்தது. 
பைக்கர்கள் மத்தியில் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் 
உருவாக்குகிற குறிக்கோளுடன் 
தொடங்கப்பட்டிருக்கும் இந்த பைக்குகள் சமூகக்குழவின் தொடக்கவிழாவில் 
பிரபல நடிகர்
 அஜய் ரத்தினம் மற்றும் ரேசிங் 
சர்க்யூட்டில் பிரபலமான சுபாஷ் சந்திர போஸ் என்ற 
புல்லட் போஸ் ஆகியோர் சிறப்பு 
விருந்தினராக கலந்துகொண்டனர்.
 மேலும் ஸ்பார்ட்டன்ஸ் ரைடிங் க்ரூ-ன் லோகோவை 
(இலச்சினை) இவர்கள் வெளியிட்டு 
அறிமுகம் செய்து வைத்தனர். 

திரு. தீரஜ் ரத்னம் மற்றும் திரு. 
சித்தார்த்தன் சிதம்பரம் ஆகியோரால்
 நிறுவப்பட்டிருக்கும் இச்சமூகம், இந்தியாவெங்கிலும் பைக் ரைடர்களுக்கு
 பாதுகாப்பு அம்சங்களை உறுதிசெய்யும் அதே வேளையில்,
 மகிழ்ச்சியோடு அனுபவிக்கிற இனிய 
அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. மேலும் முக்கியமான விஷயங்கள் மீது சமூக விழிப்புணர்வை உருவாக்குவதுடன் 
இந்திய வம்சாவளியினருக்கு குழு 
ரைடுகளை 
ஒரு நெறியாகவே உருவாக்குவதுமீதும் ஸ்பார்ட்டன்ஸ் ரைடிங் க்ரூ சிறப்பு கவனம் செலுத்தும்.

இது தொடர்பாக, இதன் நிறுவனர்களுள் ஒருவரான திரு. தீரஜ் ரத்னம் 
கூறியதாவது, ‘‘மக்கள் மத்தியில் ஒற்றுமை, சகோதரத்துவம், தோழமை ஆகிய நல்உணர்வுகளை பேணி வளர்க்கும் நோக்கத்தைக் 
கொண்டிருக்கும் ஸ்பார்ட்டன்ஸ் ரைடிங் க்ரூவை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியும், உற்சாகமும் கொண்டிருக்கிறோம்.
 இச்சமூகம் அமைத்து தரும் தளமானது, 
பயணம் செய்யவும் புதிய 
அமைவிடங்களை
 நேரில் சென்று ஆராயவும் மற்றும் ஒரே மாதிரியான சிந்தனையும், நோக்கமும் கொண்ட நபர்களோடு இயற்கையோடு 
நமது நெருங்கிய பிணைப்பு உணர்வை 
அனுபவிக்கிற மேம்பட்ட அனுபவங்களை பெறவும் 
சிறப்பான வாய்ப்புகளை வழங்கும். 
மனதுக்கு உகந்த, இணக்கமான 
இப்பயணத்தை 
மேற்கொள்வது மட்டுமின்றி, பல 
நேரங்களில் கவனிக்கப்படாமல் விடப்படுகிற சமூகம் சார்ந்த பிரச்சினைகளை 
வெளிச்சத்திற்கு

கொண்டுவருவதும் மற்றும் சமூக ஒத்திசைவு உணர்வை உருவாக்குவதும்
 இச்செயல்தளத்தின் நோக்கமாகும்.’’ 
என்று குறிப்பிட்டார்.

இதை தொடர்ந்து பேசிய திரு. 
சித்தார்த்தன் சிதம்பரம், ‘‘
சென்னைவாழ் மக்கள் பைக் ரைடிங்
 மீதான அவர்களது பேரார்வத்தை தங்களுக்குள்ளேயே கண்டறிய 
வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்; பைக்கிங் செயல்பாடு, வாழ்க்கையின்
 ஒரு வழிமுறையாக இருக்கிற பைக்கிங் ஆர்வலர்களுக்கு அவர்களது விருப்பங்களை பூர்த்தி செய்கிற ஒற்றை நிறுத்த 
அமைவிடமாகவும் இது திகழ
 வேண்டுமென்று 
நாங்கள் விரும்புகிறோம். இந்த சமூகக் 
குழுவை தொடங்கியிருப்பதன் மூலம், இந்நாட்டில் வெளிப்படாமல் மறைந்திருக்கும்
 மறைந்திருக்கும் பைக்கர்களின் தேவையை பூர்த்தி செய்யவும் நாங்கள் 
முற்படுகிறோம். மேலும் பைக் போன்ற 
இருசக்கர வாகனத்தில் நீண்ட 
பயணங்களை மேற்கொள்வதை சவால் நிறைந்த சாத்தியமற்ற ஒன்றாக
 கருதக்கூடிய அவர்களுக்கு, 
உதவுவதன் மூலம் பைக்கிங் என்பது ஒரு இனிய சிறப்பான அனுபவம் என்பதை 
உணர வைக்கவும் நாங்கள் செயல்படுவோம்.’’ என்று குறிப்பிட்டார்.

ரேசிங் உலகில் பிரபலமான திரு. சுபாஷ் சந்திர போஸ் இந்நிகழ்வில் 
பேசுகையில், ‘‘ரேசிங் தடகளத்திலேயே எனது வாழ்க்கையை எப்போதும் நான் வாழ்ந்திருப்பதாகவே உணர்கிறேன். மிக இளவயதிலேயே பைக் ரைடிங் மீதான எனது காதல்
 தொடங்கிவிட்டது. எனது பைக்கிங் 
ஆர்வம் பற்றி குறிப்பிட்டதோடு
 நிறுத்திக்கொள்ளாமல், ஸ்பார்ட்டன்ஸ் ரைடிங் குரூ என்ற ஒரு தனித்துவமான பைக்கிங் சமூகத்தை சென்னை மாநகரம் பெறுவது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அமைப்பு ரைடிங் மீதான அவர்களது பசிக்கு உணவளிப்பதோடு 
வளர்ந்து வருகிற மற்றும் அனுபவமிக்க ரைடர்களின் தேவைகளை சிறப்பாக
பூர்த்தி செய்யும் என்பதில் ஐயமில்லை; 
அதுமட்டுமின்றி இந்த உலகை இன்னும் சிறப்பான வாழ்விடமாக ஆக்குவதற்கு
 சமுதாயத்திறகு தங்களது சிறந்த பங்களிப்பை வழங்குவதிலும் ஆழ்ந்த நம்பிக்கையை இக்குழு கொண்டிருக்கிறது.’’ என்று கூறினார்.

அதிக கௌரவமிக்க ராயல் என்ஃபீல்டு
 650 ட்வின்ஸ் பைக் உரிமையாளர்களுக்காக ஒரு பிரத்யேக கிளப்பையும் ஸ்பார்ட்டன்ஸ் ரைடிங் குரூ கொண்டிருக்கிறது. 
ஆதரவற்றவர்களுக்கு உதவ சமூக பொறுப்புறுதி செயல்பாடுகளில் ஈடுபடவும் LGBTQ சமூகத்தினர் குறித்து 
விழிப்புணர்வையும், ஆதரவையும் 
உருவாக்கவும் இது திட்டங்களை வகுத்து வருகிறது. இதன்மூலம் சமுதாயத்தின்
 மீது ஆக்கப்பூர்வமான, நேர்மறையான 
தாக்கத்தை உருவாக்குவதை தனது 
இலக்குகளில் ஒன்றாக ஸ்பார்ட்டன்ஸ் 
ரைடிங் குரூ கொண்டிருக்கிறது.

Launch