இந்தியாவின் முதல் Metaverse சலூனை அறிமுகம் செய்த ஸ்டூடியோ7 சலூன் நிறுவனம்
இந்தியாவின் முதல் Metaverse சலூனை அறிமுகம் செய்த ஸ்டூடியோ7 சலூன் நிறுவனம் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் அறிமுக நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சின்னிஜெயந்த்,
ஜெயசேகரன்( Master Practitioner NLP [UK ], Founder – Zenlp Academy),
ராஜேஷ்குமார்
நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர்
(Studieo7 Salon Private Limited), டாக்டர் பிரேம்நாத் கனிசென்
மலேசிய சர்வதேச முடி மற்றும் அழகு சங்கம் – தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ஸ்டுடியோ7 சலூன் நிறுவன தலைவர் ராஜேஷ் குமார் தற்போது ஸ்டூடியோ7 நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக metaverse மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சிகை அலங்காரங்களை தேர்வு செய்துகொள்ளலாம் தேர்வுசெய்யப்பட்ட சிகை அலங்காரத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டு அதன் மூலம் தங்களுக்கு தேவையான சிகை அலங்காரத்தை தங்களது சலூன் நிறுவனத்தில் செய்து கொள்ளலாம் எனக் கூறினார்
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சிகை அலங்காரத்தை நேரடியாக சொல்லும் போது இருக்கக் கூடிய தயக்கம் இப்போது இருக்காது.
இந்தியாவில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ள metaverse சலூன் நிறுவனமாக ஸ்டுடியோஸ்7 சலூன் நிறுவனம் உள்ளது.
பல்வேறு நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களும் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து சிகை அலங்காரம் செய்து கொள்வது போன்ற வசதியும் தங்கள் நிறுவனத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சின்னிஜெயந்த் தமிழகத்தில் பிறந்த ஒருவர் முதன்முறையாக பல்வேறு நாடுகளில் சலூன் நிறுவனத்தை தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் அழகு கலை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது அந்தத்துறையில் சிறப்பாக செயலாற்றி கேட்டு வரும் நிறுவனருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும்.
வரும் காலங்களில் இன்னும் பல கிளைகளை தொட்டு இந்த நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சி அடைய வேண்டும் எனக் கூறினார்
தொடர்ந்து பேசிய அவர் திரைத்துறையில் தற்போது புதுமுக காமெடி நடிகர்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்.
தமிழ் சினிமா துறையில் மட்டுமே இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்கிறது ஆனால் மலையாளம் தெலுங்கு கனடா போன்ற திரை துறைகளில் இது போன்ற நிலைகள் இல்லை
தமிழ் திரையுலகிலும் இதே போன்ற நிலைமை ஏற்பட வேண்டும் எனக் கூறினார். அப்போதுதான் தங்களைப் போன்றவர்கள் அன்றும் இன்றும் என்றும் என திரைத்துறையில் இருப்பார்கள் எனக் கூறினார்