தமிழியக்கம் நடத்திய தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள் 147 வது பிறந்தநாள் விழா !
15 – 07 – 2022, வெள்ளி மாலை, சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது !
தமிழியக்கத்தின் நிறுவனர் & தலைவர், கல்விக்கோ, விஐடி வேந்தர், முனைவர் கோ.விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், தமிழியக்கத்தின் பொதுச் செயலாளர் கவியருவி அப்துல்காதர், தமிழியக்கத்தின் பொருளாளர் பெரும்புலவர் வே. பதுமனார், தமிழியக்கத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினர் கலைமாமணி வி.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர் !
தமிழியக்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் மற்றும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆவடி சே.வரலட்சுமி அவர்கள் வரவேற்புரை வழங்க, தமிழியக்கத்தின் மாநில செயலாளர் சொற்கோ மு.சுகுமார் அறிமுக உரை நிகழ்த்தினார் !
தமிழ் தாயின் தலைமகன்களாக விளங்கியவர்களின் வாரிசுகளான, காவல்துறை இணை ஆணையர், திருமதி எஸ்.ராஜேஸ்வரி IPS, ( தியாகி கக்கன் அவர்களின் பெயர்த்தி ), மாநில மேனாள் தகவல் அணையர் முனைவர் சாரதா நம்பி ஆரூரன் ( மறைமலையடிகள் பெயரன் மனைவி ), மரு.மணிமேகலைக் கண்ணன் ( கீ.ஆ.பெ.விசுவநாதம் மகள் ), திருமதி உமாபாரதி ( மகாகவி பாரதியாரின் தங்கை தங்கம்மாளின் கொள்ளு பெயர்த்தி ), கவிஞர் டி.எஸ்.கே.மயூரி ( பெருந்தலைவர் காமராஜர் தங்கையின் பெயர்த்தி ) ஆகியோர் இணைந்து குத்துவிளக்கு ஏற்றினர் !
இதைத் தொடர்ந்து, மேனாள் அரசவைக் கவிஞர் மற்றும் மேனாள் மேலைவை உறுப்பினர் கலைமாமணி கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் மறைமலையடிகளார் திருவுருவப் படத்தை திறந்து வைத்தார் !
பெப்சியின் துணைத் தலைவர் மற்றும் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் கலைமாமணி தினா, சொல்லின் செல்வர் நாஞ்சில் சம்பத், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஏ.ஆர்.கே.ராஜராஜா, அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் திருமதி ராஜேஸ்வரி பிரியா, மூத்த பத்திரிகையாளர் கலைமாமணி நெல்லை சுந்தர்ராஜன், உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர் !
மேனாள் தமிழக அரசின் மகளீர் ஆணையத்தின் தலைவர், மகிலா நீதிமன்றத்தின் முதல் அரசு தரப்பு வழுக்கறிஞர் திருமதி கௌரி அசோகன், தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரிய உறுப்பினர் அன்புக் கரங்கள் அப்துல் லத்தீப், தமிழ்நாடு அரசின் திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர் திருநங்கை மயிலை ராதா, அனைத்திந்திய திரைப்பட வர்த்தக சபை வழக்கறிஞர் திரு. கல்யாண் சக்ரவர்த்தி மற்றும் ஒளிப்பதிவாளர் திரு செல்வா,கிராம நிர்வாக அதிகாரி திரு பம்மல் சந்திரன், திரு எச்.உத்தம் சந்த் ஜெயின், கவிஞர் சிந்தைவாசன், கவிஞர் மற்றும் எழுத்தாளர் பி.எஸ்.பி.விஜயபாலா, கவிஞர் சுமித்ரா, வேப்பேரி காவல்துறை உதவி ஆணையர் திரு ப.ராஜா, படைப்புக் குழுமம் திரு ஜின்னா, எழுத்தாளர் தாம்பரம் ஹரிதாசு, எழுத்தாளர் நாஞ்சில் நாட்டான் பத்மநாபன், கவிஞர் விவசாயி ஜெயராமன், கவிஞர் மற்றும் எழுத்தாளர் திரு தமிழ் எழிலன், உலக தமிழ்தேச இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் ஆவல் கணேசன், போலீஸ் பப்ளிக் ப்ரென்ட்ஸ் தலைவர் லயன் டாக்டர் எல்.பரமேஸ்வரன், சத்யமித்ரன் முதன்மை செய்தியாளர் முனைவர் பி.வெங்கடேசன், மூத்த பத்திரிகையாளர் ஐயா எம்.டி.இராமலிங்கம், எழுத்தாளர் திருமதி சசிகலாதேவி ரவீந்திரதாஸ்,
தமிழியக்கத்தின் திருவள்ளூர் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் தி.முருகன் ( எ.இ ), திரு. ஷேஷா சாய்நாதன்
போரூர் அய்யப்பன், ஆவடி சங்கம் சில்க்ஸ் வெங்கடேசன்,
அரங்கம் அமைப்பு செய்துதந்த,வேப்பம்பட்டு சீனிவாசன், சி.லோகேஷ்,
இந்நிகழ்ச்சியின் மக்கள் தொடர்பாளர் மதிஒளி ராஜா, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கழுகு கே.ராஜேந்திரன், அ.லட்சுமணன்,போரூர் ஜனா, போரூர் பி.பார்த்திபன், இன்சூரன்ஸ் B.கௌரி, சித்ரா பாரதி, புவனேஷ்வரி, விஜய் டி வித்யாதர், அருன், சமூக ஆர்வலர்கள்,மற்றும் தமிழியக்கத்தின் சென்னை மற்றும் இதர மாவட்ட நிர்வாகிகள், ஊடகவியலாளர்கள் என அனைவருக்கும் சால்வை அனிவித்து பெரும்புலவர் வே.பதுமனார் எழுதிய ” சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்களை ” என்ற நூலையும் வழங்கி பாராட்டி மகிழ்ந்தார் வேந்தர் கல்விக்கோ கோ.விஸ்வநாதன் அவர்கள் !
அதைத் தொடர்ந்து, தமிழியக்கத்தின் எழுத்தாளர் அணி ஒருங்கிணைப்பாளரும் மறைமலையடிகள் பெயரனுமான திரு மறை.தாயுமானவர் நெகிழ்வுரை வழங்கினார் !
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், தமிழியக்கத்தின் சமூக மேம்பாட்டுப் பேரவை உறுப்பினர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் நிகழ்ச்சிகளை நெறியாள்கை செய்து வழங்க, தமிழியக்கத்தின் திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் திரு சங்கர் நீதிமாணிக்கம் நன்றியுரை வழங்கினார் !