TI க்ளீன் மொபிலிட்டி, மோன்ட்ரா எலக்ட்ரிக் 3W ஐ அறிமுகப்படுத்துகிறது

TI க்ளீன் மொபிலிட்டி, மோன்ட்ரா எலக்ட்ரிக் 3W ஐ அறிமுகப்படுத்துகிறது

சென்னை, செப்டம்பர் 06, 2022: ‘ஒரு முருகப்பா குழும நிறுவனமான டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா’ இன் துணை நிறுவனமான டிஐ க்ளீன் மொபிலிட்டி, இன்று சென்னையில் மோன்ட்ரா எலக்ட்ரிக் 3W ஆட்டோவை அறிமுகப்படுத்தியது. இந்த 3W ஆட்டோவின் வெளியீடு மின்சார வெளியிடத்தில் பிராண்டின் நுழைவைக் குறிக்கிறது. இந்த புதிய வாகனம், இந்தியாவின் கடைசி எல்லை இயக்கத் துறையில் அதன் தனித்துவமான தோற்றம், சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் வலுவான உருவாக்கத் தரத்துடன் புரட்சியை ஏற்படுத்த உள்ளது.

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் செயல் தலைவர் திரு. அருண் முருகப்பன், “ மோன்ட்ரா எலக்ட்ரிக் 3W எங்களுக்கான புதிய வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்பின் கட்டத்தைக் குறிக்கும். இந்தத் தயாரிப்பை உருவாக்க எங்களின் சிறந்த வளங்களையும் நேரத்தையும் முதலீடு செய்துள்ளோம். வாடிக்கையாளர்களின் பின்னூட்டங்களைக் காண்பதற்கு நாங்கள் உற்சாகமாய் இருக்கிறோம். TI க்ளீன் மொபிலிட்டியில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் எங்களுக்கும் வணிக அர்த்தமுள்ள தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம். மோன்ட்ரா எலக்ட்ரிக் மூலம் நாங்கள் கார்பன் நடுநிலைமையை நோக்கி கடுமுயற்சி செய்கிறோம். எலக்ட்ரிக் 3W என்பது மிகப்பெரிய வளர்ச்சி திறன் கொண்ட EV பிரிவுகளில் ஒன்றாகும். 2070 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் முயற்சியில் இந்த பிரிவு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சுத்தமான இயக்க முன்னோடியாகவும், உள்நாட்டு வணிக நிறுவனமாகவும், நிலையான எதிர்காலத்திற்கான அதன் பார்வையை உணர இந்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது எங்கள் கடமை என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.

Launch