- போதைப் பொருட்களை தடுக்க நிச்சயமாக அரசாங்கம் தான் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…..
- திரைப்படத்தின் மூலமாக இதன் பாதிப்புகளை பற்றி சொல்ல வேண்டிய அவசியமும் கலைஞர்களுக்கு இருக்கிறது…..
இயக்குநர் அமீர் பேட்டி…..
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது தொடர்பாக தேசிய அளவில் உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி போட்டி நாளை முதல் இரண்டு நாட்கள் மதுரையில் நடக்க இருக்கிறது.
தமிழ்நாடு தேசிய உடற்கட்டமைப்பு சங்கத்துடன் இணைந்து இயக்குநர் அமீர் நடத்தும் இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்து சென்னை தி.நகரில் உள்ள தனது அலுவலகத்தில் இயக்குநர் அமீர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது இயக்குநர் அமீர் கூறியதாவது,
தமிழ்நாடு தேசிய உடற்கட்டமைப்பு சங்கத்துடன் ( Tamilnadu Fitness Bodybuilding Association ) இணைந்து மதுரையில் இரண்டு நாட்கள் தேசிய ஆணழகு போட்டியை நடத்த இருக்கிறோம். தற்போதைய காலகட்டத்தில் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு இளைஞர்களுக்கு தேவைப்படுகிறது.
இப்போதிருக்கும் பலரும் ஹெரால்டு, ஊசி மாத்திரைகள் போன்ற போதை பழக்கத்தின் மூலம் உடலை ஃபிட்டாக வைக்க நினைக்கின்றனர். ஆனால் அதை விடுத்து இயற்கையான உணவுகளுடன் உடற்கட்டமைப்பை மேற்கொள்ள வேண்டும். அது தான் ஆரோக்கியமானது என்றும், சென்னையில் பலமுறை போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடத்தி வருகிறோம் என்பதாலேயே மதுரையில் நடந்த உள்ளோம். இன்னும் அடுத்தடுத்த மாவட்டங்களில் நடத்துவோம். சாதாரணமாக நடத்துவதை விட 10 லட்சம் வரை பணத்தை பரிசுகளாக கொடுக்கும் போது இன்னும் வரவேற்பு கிடைக்கும் என்றும், இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவோர் , இந்தோனேசியாவில் நடக்கவிருக்கும் உலக அளவிலான போட்டியில் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும், திரைப்படங்களில் போதை பொருள்கள் பயன்பாடு காட்டப்படுகிறது என்ற கேள்விக்கு, பல திரைப்படங்களிலும் கதாநாயகர்களே போதை பொருளை உபயோகப்படுத்துவது போல காட்டுகின்றனர். அவ்வாறு இல்லாமல், திரைப்படங்களிலும் போதை பொருள் தடுப்பு குறித்து அதில் நடிப்பவர்களும் விழிப்புணர்வு குறித்து முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
தற்போதைய இளைஞர்கள் கல்லூரி சென்றால் போதை இல்லாமல் வந்து சேர்வதே பெரிய விஷயம் என்றாகி விட்டது. தற்போது அரசியலில் இருக்கும் பெரிய குடும்பம் கூட போதையில் சிக்கி மாட்டி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஒரு தொடக்கம் தான். போதையில் இருந்து வெளியே வர உடற்பயிற்சி மட்டுமல்ல. எவ்வளவோ இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று. முழுக்க முழுக்க போதையினால் இந்த சமூகம் சீரழிந்து வருகிறது.
முன்னொரு காலத்தில் ஒரு எம்.ஜி ஆர் குடித்தால் ஐந்து எம் ஜி ஆர் வந்து அது தவறு என்று சொல்வார்கள். ஆனால் இன்று கதாநாயகர்களே போதை பொருளை உபயோகப்படுத்துகின்றனர். யாரையும் தனி மனிதராக தாக்கி பேசவில்லை. நான் எப்போதும் மதுவுக்கு எதிராக குரல் கொடுப்பவன் என்றும், தற்போது கலாச்சாரம் மாறி விட்டது. திரைப்படத்தின் மூலமாக இதன் பாதிப்புகளை பற்றி சொல்ல வேண்டிய அவசியமும் கலைஞர்களுக்கு இருக்கிறது. திரைப்படத்தினை பார்த்து தான் இளைஞர்கள் கெட்டு போவதை ஒப்பு கொள்ள முடியாது. ஏனெனில் கெட்டு போக இன்டர்நெட் என்று எவ்வளவோ இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
சமீபத்தில் நடிகர் கார்த்தி கூட போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். உண்மையில் போதை பரவி கிடக்கிறது என்பது தான் உண்மை. இன்னும் தேசிய அளவில் பார்க்கும் போது போதையை திட்டமிட்டு உருவாக்கும் அச்சமும் இருக்கிறது. பஞ்சாப்பில் போதை பழக்கம் அதிகமாக இருப்பதன் பின்னால் அரசியல் இருக்கிறது எனவும் கூறினார்.
போதைப் பொருளை முழுமையாக அரசு நடவடிக்கை வேண்டுமா அல்லது தனிமனித ஒழுக்கம் முக்கியமா என்ற கேள்விக்கு, போதைப் பொருட்களை தடுக்க நிச்சயமாக அரசாங்கம் தான் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை போடாமல் தனி மனித ஒழுக்கத்தை கொண்டு வர முடியாது. தனி மனித ஒழுக்கம் குடும்பத்தில் இருந்து வர வேண்டும். தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்தே போதை பழக்கம் துவங்கி விட்டது என்றும் கூறினார்.