தனிஷ்க் இந்த விழாக்காலத்தில் சோழர்களின் பெருமையைக் கொண்டாடுகிறது

தனிஷ்க் இந்த விழாக்காலத்தில் சோழர்களின் பெருமையைக் கொண்டாடுகிறது

தனிஷ்க் இந்த விழாக்காலத்தில் சோழர்களின் பெருமையைக் கொண்டாடுகிறது!

~ காலம் கடந்தும் மனதில் நிற்கும் வகையில் பொற்காலத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தினால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கும்  புதிய நகைத்தொகுப்பு ~

சென்னை, செப்டம்பர் 20, 2022: மக்களின் மீது பேரன்பும், கருணையும் கொண்ட பேரரசு, கம்பீரமிக்க போர்வீரன் மனோபாவம், பெயர் சொல்லும் செல்வாக்கு, வலுவாக ஊன்றியிருக்கும் கலாச்சார வளம், பொற்காலத்தின் செழுமை இவையனைத்தும் சோழப் பேரரசின் மறுப்பெயராக சொல்லுமளவிற்கு பொருந்தமானவை. கடல் கடந்து வெற்றிக்கொடி நாட்டிய மாபெரும் பேரரசைக் கொண்டாடும் வகையிலும், அதன் கவர்ந்திழுக்கும் தெய்வீக மகிமையை வெளிப்படுத்தும் நோக்கிலும் டாடாவின் ஒரு அங்கமான இந்தியாவின் மாபெரும் ஜுவல்லரி விற்பனை பிராண்டான தனிஷ்க் ‘த சோழா’ (The Chozha) என்னும் பிரத்யேக நகைத்தொகுப்பை அறிமுகப்படுத்துகிறது.

காண்பவர்களை பிரமிக்க வைக்கும் பிரம்மாண்ட வேலைப்பாடுகள் மிக்க இந்த நகைத்தொகுப்பின் வெளியீட்டு விழாவில் பேசிய திரு. அருண் நாராயணன், வைஸ் பிரஸிடெண்ட் கேட்டகரி, மார்க்கெட்டிங் & ரீடெய்ல் பிரிவு, தனிஷ்க், டைட்டன் கம்பெனி லிமிடெட் [Mr. Arun Narayan, VP Category, Marketing & Retail, Tanishq, Titan Company Limited], “நம்முடைய பாரம்பரியமிக்க வரலாறு மற்றும் தொன்மையான கலாச்சாரம் இவை இரண்டும் மக்களோடு மக்களாக நம்முடன் ஒன்றிணைந்து இருக்கிறது. இதுவே நமக்கான அடையாளத்தையும், பெருமையையும் கொடுக்கிறது. அதனால்தான் நமது வரலாற்றில் உண்மையிலேயே பொற்காலமாக போற்றப்படும் காலக்கட்டத்தின் கட்டிடக்கலை, கலை மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றினால் ஈர்க்கப்பட்டு, அதன் வெளிப்பாடாக இந்த பிரத்தியேக   நகைத் தொகுப்பை இந்த பண்டிகைக் காலத்தில் அர்ப்பணிப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். தனிஷ்க்கின் ‘சோழா’, நகைத்தொகுப்பு, நம்முடைய செழுமையான பாரம்பரியத்தின் கதைகள், சின்னங்கள் மற்றும் சாதனை மனிதர்களை உயிர்ப்பிக்கும் மிக நேர்த்தியான மற்றும் அசல் நகைகளின் தொகுப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

Launch