சுயமரியாதை மாநாட்டின் தலைவராக இருந்த ஊ.ப.சௌந்திரபாண்டியன்
நாடார் சமூகத்தின் நலனுக்காக மட்டுமின்றி தலித்துக்கள் போன்ற பிற சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தவர். அப்படிப்பட்ட ஊ.ப.சௌந்திரபாண்டியனின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக சென்னை சைதாப்பேட்டையில் நாடார் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது.
அன்னை வேளாங்கண்ணி பெண்கள் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு பொதுச்செயலாளர் வி.எல்.சி.இரவி, அமைப்பாளர் மார்க்கெட் ராஜா காப்பாளர் செ.வீரக்குமார் கொள்கை பரப்பு செயலாளர் வ.சி.பொன்ராஜ், தலைமை நிலைய செயலாளர் வ.சி.பொன்ராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் பா.வேல்குமார் தேசிய நாடார் கூட்டமைப்பு நிறுவனத்தலைவர் குமரிசிவாஜிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மாநாட்டில் சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து சிறந்த 130 நாடார் சங்கங்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பசுமை நாயகனும், பாமக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸை, பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சர் மாஃபா.க.பாண்டியராஜன், பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.என்.ராஜா, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் ஜெய்சுவால், , அன்னை வேளாங்கண்ணி கல்வி குழுமம் தலைவர் எஸ்.தேவராஜ், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.