தமிழ்நாடு சுற்றலா விருதுகள் – 2022

தமிழ்நாடு சுற்றலா விருதுகள் – 2022

தமிழ்நாடு சுற்றலா விருதுகள் – 2022
சுற்றலாதொழில் முனைவோர்களுக்கான பதிவுகள் மேற்கொள்ள நெறிமுறைகள் வெளியிடுதல்

சுற்றுலாவை நெறிப்படுத்தி செயல்பாட்டை நிலைப்படுத்தவும் சேவையின் தரத்தை உயர்த்தவும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு 1.தமிழ்நாட்டிலுள்ள Adventure Tourism Operators 2.Camping Operator 3.Caravan Tour Operators &Caravan Park Operators மற்றும் 4.Bed & Breakfast/Home stay Establishment – கள் தரமான மற்றும் பாதுகாப்பான சேவைகளை வழங்குவதற்கும். உரிய பதிவுகளை மேற்கொள்ளவும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளனர்

  1. WoW தமிழ்நாடு
    சுற்றுலாத்துறையும், Global Media Box – ம் இணைந்து சுற்றுலா தொடர்பான சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கான WoW தமிழ்நாடு என்ற போட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.இப்போட்டியில் சுற்றுலாத்தலங்களை சிறந்த முறையில் புகைப்படம் மற்றும், வீடியோ எடுத்தவர்களைக் கண்டறிந்து பாராட்டுகிறது.

இப்போட்டிகளின் மூன்றாம் பதிப்பு உலக சுற்றுலா தினமான இன்று 27.09.2022 முதல் 25.12. 2022 வரை சுற்றுலாத் துறையின் இணையதளமான www.wowtamilnadu.com மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை புதிவுசெய்யலாம் இந்நிகழ்வு பொழுதுபோக்கு மற்றும் தொழில் முறை புகைப்படக் கலைஞர்களை ஊக்குவிக்கிறது. மேலும் அவர்களின் செயல்திறனை விளக்கும் வகையில் கலாச்சாரத்தினை சித்தரிக்கும் 10 புகைப்படங்கள் மற்றும் 10 வீடியோக்களை சமர்ப்பிக்கலாம். வெற்றி பெறும் நபர்களுக்கு சர்வதேச பயணம் மற்றும் Hot Air Balloon ல் பயணிக்க வாய்ப்பு அளிக்கப்படும். வாவ் தமிழ்நாடு 2022ன் 12 கிராண்ட் வெற்றியாளர்கள் 5 நாட்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு சிறந்த படைப்பாளியினை தேர்ந்தெடுத்து நினைவு பரிசுகளும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்படும். போட்டிக்கான முடி அகன்15.01.2023 அன்று பொங்கல் திருநாளின் போது அறிவிக்கப்பாடும். இப்போட்டி பல திறமையான புகைப்பட மற்றும் வீடியே கலைஞர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைய வழி வகுக்கும்

உலக சுற்றுலாத்தின நிகழ்ச்சிகளில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் மற்றும் மாண்புமிகு சுற்றலாத் துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், ஆகியோர்களுடன் டாகடர் சந்தரமோகன். B இ.ஆ .ப., அரசு முதன்மைச் செயலாளர் சுற்றுலா, பண்பாடு மற்றும்
அறநிலையங்கள் துறை மற்றும் தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ .ப., சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர், திரு சே.ரா.காந்தி,
இ. ர.பா.ப., இயக்குநர் கலை பண்பாட்டுத்துறை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்

Political