நவராத்திரியை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள  பூம்புகார் விற்பனை நிலையத்தில்  வித விதமான  கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது

நவராத்திரியை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள  பூம்புகார் விற்பனை நிலையத்தில்  வித விதமான  கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது

இந்த ஆண்டு குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 85 ஆயிரம் ரூபாய் வரை மதிப்பிலான பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இந்த ஆண்டு ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை செய்ய இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தாமோ அன்பரசன் தெரிவித்துள்ளார்

கடந்த 26 ம் தேதி முதல் அடுத்த மாதம் 5 ம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.நவராத்திரி விழா பண்டிகையை ஒட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகத்தின்  பூம்புகார் விற்பனை நிலையத்தில் வித விதமாக கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சியை  சிறு குறு தொழில்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டார்.

இதில் வித விதமான பலவகை கடவுள் கொலு பொம்மைகள் ,வாரணாசி பொம்மைகள், கொல்கத்தா களிமண் பொம்மைகள், சென்னப்பட்டினம் பொம்மைகள் என விதவிதமான வடிவங்களில் கொழு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பெரியார், கருணாநிதி அம்பேத்கர் ,திருவள்ளுவர் ,பாரதியார் உருவ வடிவங்கள் கொண்ட பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 50 ரூபாயிலிருந்து 85 ஆயிரம் ரூபாய் வரையிலும்  மதிப்பிலான கொழு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வருகின்ற அக்டோபர் 6  ஆம் தேதி வரை நடைபெறுகிறது.தினசரி காலை 10 மணி முதல் இரவு   8 மணி வரை இந்த விற்பனை கண்காட்சி நடைபெற உள்ளது.

*அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா மோ அன்பரசன் கூறியதாவது:-*

நவராத்திரி விழாவை ஒட்டி இந்த பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.மிக சிறப்பாக பல்வேறு விதமான கொலு பொம்மைகள் இங்கு இடம்பெற்றுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலகட்டத்தில் கொலு பொம்மைகள் விற்பனை இல்லை..அவற்றை ஈடு செய்யும் வகையில் இந்த ஆண்டு விற்பனை அதிக அளவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என கூறிய அமைச்சர் இந்த ஆண்டு 1 கோடி ரூபாய் வரை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் திருச்சி ,மதுரை உள்ளிட்ட 12 முக்கிய நகரங்களில் அரசு சார்பில் இந்த கொலு பொம்மைகள் கண்காட்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.

Business