இதய ரத்தநாளம் சார்ந்த நோய்க்கு ‘உத்தரவாதத்துடன் கூடிய ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை திட்டம்: புரோமெட் மருத்துவமனை அறிமுகம்

இதய ரத்தநாளம் சார்ந்த நோய்க்கு ‘உத்தரவாதத்துடன் கூடிய ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை திட்டம்: புரோமெட் மருத்துவமனை அறிமுகம்

சென்னை, செப்.29–உலக இதய தினத்தை கொண்டாடும் வகையில் அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையான புரோமெட் மருத்துவமனை இதய ரத்த நாள பாதிப்புக்கு நாட்டிலேயே முதன் முறையாக ‘உத்தரவாதத்துடன் கூடிய ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் திரு டி எஸ் ஜவஹர், ஐஏஎஸ், கூடுதல் தலைமைச் செயலாளர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு அரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் திருப்பதி முன்னாள் எம்.பி.யும், கூடூர் எம்.எல்.ஏ.யுமான டாக்டர் வெலகபள்ளி வரபிரசாத ராவ் (ஐஏஎஸ்), புரோமெட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஸ்பூர்த்தி அருண் மற்றும் இம்மருத்துவமனையின் இயக்குனரும், தலைமை இதய நோய் நிபுணருமான டாக்டர் அருண் கல்யாண சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். “உத்தரவாதத்துடன் கூடிய ஆஞ்சியோபிளாஸ்டி” திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு முதல் 12 மாதங்களில் ஸ்டென்ட் தொடர்பான ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அது உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்.

Health