சென்னை மண்ணடியில் உள்ள சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா SDPI கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது

சென்னை மண்ணடியில் உள்ள சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா SDPI கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது

சென்னை மண்ணடியில் உள்ள சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI )கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அது குறித்து அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஜி மற்றும் மாநில தலைவர் அப்துல் முபாரக் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசியவர்கள்,

பல்வேறு தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
அது குறித்து அகில இந்தியா தலைவர் மலையாள மொழியில் தெரிவித்தார்.

பின்னர் அதனை விளக்கி பேசிய தமிழ்நாடு மாநில தலைவர் நெல்லை முபாரக் ,

சட்டத்தையே வன்முறையையோ யார் கையில் எடுத்தாலும் எஸ் டி பி ஐ கட்சி எதிர்க்கும்.

கருணை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.கருணையில் யாருக்கும் பாரபட்சம் காட்ட கூடாது.
விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வரும் போது பாரபட்சம் வேண்டாம் என்கிறோம். யாரை வேண்டுமானாலும் விடுதலை செய்யலாம் அந்த முடிவு அரசு கையில் உள்ளது ஆனால் அது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.

100% மக்களுக்காக பேசுகிற அரசாக அரசு இல்லை.அனுதினமும் மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுகிறார்கள்.
மக்களுக்காக பேசும் அரசாங்கம் இருக்க வேண்டும்.
மக்களை எல்லாம் அடிப்படை சட்டத்தை விட்டு திசை திருப்ப கூடாது.
மக்களின் அடிப்படை பிரச்சினை நோக்கி திசை திருப்ப வேண்டும்

எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து மக்களை ஒன்று இணைக்க முயற்சி எடுக்க வேண்டும்.

பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விலை வாசி உயர்வு, மக்கள் மீது திணிக்க கூடாது.
தமிழர்கள் இறந்தால் அவர்களுக்கு பொருட்டு இல்லை , தமிழக மீனவர்கள் இறந்தால் பொருட்டு இல்லை. இது ஒன்றிய அரசின் வஞ்சக தன்மை.
தமிழக மக்களுக்கு செய்யும் மிக பெரிய துரோகம் என்றார்.

தொடர்ந்து, 10 % இட ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு,

பொருளாதாரத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீடு பொருத்தவரை நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இந்த தீர்ப்பை எஸ்டிபிஐ கட்சி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சொல்கிறது. உச்ச நீதிமன்றத்தில் எஸ் டி பியை கட்சி மேல்முறையீடு செய்யும்.
ஏனென்றால், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் அது வறுமை ஒழிப்பு திட்டமாக இருக்காமல், சமூக அடிப்படையில் எல்லாருக்கும் சம வாய்ப்பு வழங்கும் வகையில் இருக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு எந்த நோக்கத்திற்காக வழங்கப்பட வேண்டுமோ அந்த நோக்கத்திற்காக வழங்கப்பட வேண்டும். இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் மட்டும் வழங்கப்படக் கூடாது.
10% இட ஒதுக்கீட்டை எஸ் டி பி ஐ எதிர்க்கிறது.இட ஒதுக்கீட்டிற்கான நோக்கத்தை அது தகர்க்கிறது அதனால் தான் அதை எதிர்க்கிறோம்.

விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை நோக்கி போராடுகிற கட்சி எஸ் டி பி ஐ
எஸ் டி பி ஐ ஒரு இஸ்லாமிய கட்சி அல்ல. இது எல்லோருக்குமான ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் கட்சி.

மதத்தால், இனத்தால், மொழியால் என எதனால் ஒடுக்கப்படுகிறார்களோ அதற்காக அவர்களுக்காக எஸ் டி பி ஐ போராடும்.

பிரதமர் மோடி தலைமையில் இந்திய அரசு வல்லரசாகி வருகிறது இது வெளிநாடுகளுக்கு அச்சுருத்துகிறது. அவர்கள் அடுத்து வெல்ல கூடாது என்ற எண்ணத்தில் தான் செயல்படுகிறார்களா என்ற கேள்விக்கு,

ஒவ்வொரு நாளும் ஜிடிபி குறைந்து கொண்டே வருகிறது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
உலகத்திலேயே ரிசர்வ் பேங்க் கவர்னராக பொருளாதாரம்
படித்தவருக்கு பதிலாக வரலாறு படித்தவர் இருப்பது இங்கு மட்டும்தான் இருக்கும்.
இதை வைத்துக்கொண்டு இந்தியா வல்லரசாகும் என்று எப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை .

இந்தியா வல்லரசாக வேண்டும் என்பது எங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை ஆனால் அதற்கான அடிப்படை வேலையை பாஜக அரசு செய்யவில்லை என்றார். .

District News