18 – வது ஐரோப்பிய நீரிழிவு பாத ஆய்வுக்குழு நிகழ்வில் எம்.வி. நீரிழிவு மருத்துவமனைக்கு விருது !

18 – வது ஐரோப்பிய நீரிழிவு பாத ஆய்வுக்குழு நிகழ்வில் எம்.வி. நீரிழிவு மருத்துவமனைக்கு விருது !

சென்னை : 09 நவம்பர் 2022 : 2022 செப்டம்பர் 16-18 தேதிகளில் ஐரோப்பாவின் ஸ்லோவேகியா நாட்டின் பிராட்டிஸ்லாவா நகரில் நடைபெற்ற 18 – வது ஐரோப்பிய நீரிழிவு பாத ஆய்வுக்குழு கூட்டத்தில்
( DFSG ) சென்னை , ராயபுரம் – எம்வி . நீரிழிவு மருத்துவமனைக்கு இரண்டாவது பரிசு வழங்கப்பட்டிருப்பதை இன்று பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது . சென்னை , ராயபுரத்தில் அமைந்துள்ள இம்மருத்துவமனை பல ஆண்டுகளாக நீரிழிவுக்கான ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு மக்களுக்கு சிறப்பான சேவையாற்றி வருகிறது .

DFSG எனப்படும் இந்நிகழ்வு , ஐரோப்பாவில் நீரிழிவால் பாதிக்கப்படும் பாதம் குறித்த மருத்துவ நிபுணர்களின் மிகப்பெரிய சந்திப்பு கூட்ட நிகழ்வாகும் ஐரோப்பா முழுவதிலுமிருந்து நீரிழிவு பாத சிகிச்சையில் நிபுணர்களாக செயலாற்றி வரும் பல மருத்துவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின்போது , எம்.வி. நீரிழிவு மருத்துவமனை மற்றும் புரொஃபசர் எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆராய்ச்சி மையம் , ராயபுரம் – சென்னை பங்கேற்று ” நீரிழிவு நிலையிலுள்ள நபர்களுக்கு இரத்தஓட்டத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களது கால்களை பாதுகாப்பது ” என்ற தலைப்பு மீது ஒரு ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்தது.

எம்.வி. மருத்துவமனையின் தலைவரும் , தலைமை நீரிழிவியல் மருத்துவருமான டாக்டர்.விஜய் விஸ்வநாதன் இந்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து பேசியதாவது ” ராயபுரம் , நீரிழிவுக்கான எம்.லி. மருத்துவமனையில் ஆஞ்சியோகிராபி சோதனை செய்யப்பட்ட 130 நபர்களை உள்ளடக்கி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . இதில் 89 நபர்களுக்கு விளைவு தரவு இருந்தது . ( நோயாளிகளின் சராசரி வயது : 63.8 ± 8.6 ஆண்டுகள் மற்றும் நீரிழிவு பாதிப்பின் சராசரி காலஅளவு என்பது 16.1 ± 8.8 ஆண்டுகள் என்பதாக இருந்தது . இந்த அனைத்து 89 நோயாளிகளுக்கும் கால்கள் மற்றும் பாதத்தில் குறைவான இரத்த சுழற்சி என்ற நிலையோடு நீரிழிவினால் பாதத்தில் ஏற்படும் புண்களும் இருந்தன ( PAD : புறவெளிதமனி நோய்

ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொள்ளப்பட்டவர்களுன் 76.3 % நபர்களுக்கு பெரிய அளவிலான உறுப்புநீக்கம் செய்வது தவிர்க்கப்பட்டது ( முழங்காலுக்கு கீழே அல்லது முழங்காலுக்கு மேலே செய்யப்படும் உறுப்பு நீக்கமே , பெரிய உறுப்புநீக்கமாக கருதப்படுகிறது . ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்ட போதிலும் கூட 23.7 % நோயாளிகளுக்கு பெரிய உறுப்புநீக்க சிகிச்சை செய்யப்படுவது அவசியமாக இருந்தது . கடுமையான , தீவிர நீரிழிவு பாத தொற்றுடன் மருத்துவமனைக்கு காலம் தாழ்த்தி தாமதமாக அவர்கள் வந்ததே இதற்குக் காரணம்.

PAD பாதிப்பும் , நீரிழிவு பாத தொற்றும் இருந்த பெரும்பாலான நோயாளிகளுக்கு பெரிய .அளவிலான உறுப்புநீக்கம் நிகழாமல் எங்களால் தடுக்க முடிந்தது மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டியின் மூலம் இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது என்று டாக்டர் . விஜய் விஸ்வநாதன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியின்போது பேசிய எம்.வி. மருத்துவமனையின் இடையீட்டு கதிர்வீச்சு சிகிச்சையியல் நிபுணர் டாக்டர். ஆர். ரவிக்குமார் வெற்றிகரமான ஆஞ்சியோபிளாஸ்டி மருத்துவ செயல்முறையில் ” ஊன்ட் பிளஷ் ” ( Wound blush ) என்பது மிக முக்கிய அம்சமாக இருக்கிறது .
.ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறைக்குப் பிறகு சிறப்பான ஊன்ட் பிளஷ் நிலையுள்ள எந்தவொரு நபருக்கும் காயம் ஆறி குணமடைந்து விடும் என்று பெரும்பாலும் உத்தரவாதம் அளிக்க முடியும் என்று கூறினார்.

ராயபுரம் – எம்.வி. நீரிழிவு மருத்துவமனையின் , நீரிழிவு பாத அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் . ஜி . செந்தில் கூறியதாவது : ” நீரிழிவு பாத தொற்றுள்ள பல நபர்களில் , பாதத்தில் துடிப்புகள் உணரக்கூடியவையாக இருப்பதில்லை . PAD பாதிப்பு அவர்களுக்கு இருப்பதையே இது காட்டுகிறது . அத்தகைய நபர்களுக்கு பெரிய அளவிலான உறுப்புநீக்க சிகிச்சை செய்ய வேண்டிய உயர் இடர்வாய்ப்பு இருக்கிறது . ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறையை மேற்கொள்வதன் மூலம் அத்தகைய நபர்களின் பாதங்களை வெட்டி துண்டிக்காமல் , பாதுகாப்பது சாத்தியமே . திசு / சதை அழுகல் ஏற்பட்டுள்ள கால் விரல்களை வெட்டி நீக்குவது ( சிறிய உறுப்பு நீக்கம் ) அவர்களுக்குத் தேவைப்படும் . அவர்களுக்கு இருக்கும் தொற்று தீவிரமாக இல்லையெனில் , இதன்மூலம் பெரிய அளவிலான உறுப்பு நீக்கம் செய்யாமல் எங்களால் தடுக்க முடியும்.

Health