பாஜகவின் இந்தி திணிப்பு, அண்ணாமலையின் மத அரசியல், தர குறைவான பேச்சு போன்றவர்களுக்கு தன் எதிர்ப்பை பதிவு செய்வதாக கூறினார்.

பாஜகவின் இந்தி திணிப்பு, அண்ணாமலையின் மத அரசியல், தர குறைவான பேச்சு போன்றவர்களுக்கு தன் எதிர்ப்பை பதிவு செய்வதாக கூறினார்.

முன்னேறிய சமூகத்திற்கு 10% இட ஒதுக்கீடு என்பது நியாயமற்றது. இந்திய சுயராஜ்ய கட்சி நிறுவனத் தலைவர் வி ராம்குமார்

சென்னை வடபழனியில் உள்ள ஹரி மஹாலில் இந்திய சுயராஜ்ய கட்சி நிறுவனத் தலைவர் ராம்குமார் செய்தியாளர்களிடம் முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு என்பது நியாயமற்றது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டும் என்றே இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த 10% இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது. இதற்கு எனது வலிமையான எதிர்ப்பை பதிவு செய்வதாக தெரிவித்தார். மேலும் இந்த பிரச்சனை குறித்து சட்டரீதியாக போராடுவோர்க்கு தன் ஆதரவு இருப்பதாக கூறினார். தமிழ் நாட்டில் மத்திய அரசு வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு 80 சதவீதம் இடம் கொடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்களில் பணபுரியும் வட இந்தியர்களுக்கு
மாநில மொழி தெரியாததால் பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறினார். மேலும் போக்குவரத்து விதி மீரல்களுக்கு விதிக்கபடும் அபராத தொகை மிக அதிகமானது என்றும்,ஹெல்மெட் போடாததற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதற்கு பதிலாக ஹெல்மெட் வழங்கலாம் என்றும், இன்சூரன்ஸ் ஓட்டுனர் உரிமம் இல்லாதற்கு அந்த இடத்திலேயே உடனடியாக அளிக்க ஏற்பாடு என்று தெரிவித்தார்.மேலும் பாஜகவின் இந்தி திணிப்பு, அண்ணாமலையின் மத அரசியல், தர குறைவான பேச்சு போன்றவர்களுக்கு தன் எதிர்ப்பை பதிவு செய்வதாக கூறினார். இச்செய்தியாளர் சந்திப்பில் நிர்வாகிகள் ராஜ்குமார் மற்றும் சைவுல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

Political