கார்னியர் நிறுவனத்தின் முதல் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மையம் சென்னையில் திறப்பு

கார்னியர் நிறுவனத்தின் முதல் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மையம் சென்னையில் திறப்பு

கார்னியர் நிறுவனத்தின் முதல் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மையம் சென்னையில் திறப்பு
கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அழகான பேக்கிங்காக மாற்ற ஒருங்கிணைப்பு

சென்னை: 2022 நவம்பர் 22 : உலகின் மிகப் பெரிய அழகு சாதனங்களின் பிராண்டான கார்னியர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தனது உறுதிமொழியை வலுப்படுத்தும் வகையில், சென்னையில், பிரத்யேகப் பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கும் மையத்தைத் தொடங்க உள்ளது. பிளாஸ்டிஸ் ஃபார் சேஞ்ச் என்னும் சமூக அமைப்புடன் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்துச் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க முனைந்துள்ளது. முதல் வருடத்தில், கடலில் கலக்கவுள்ள 2000 டன் பிளாஸ்டிக் கழிவுகளை தடுத்து மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் உள்ளூர் சமூகங்களைச் சேர்ந்த 2000 மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ இருக்கிறது. சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் கார்னியர் நிறுவனத்தின் ஐகானிக் ஹேர்கேர் அல்ட்ரா டூ ரகப் பொருள்களுக்கான பேக்கேஜிங் பயன்பாட்டுக்காக ஒருங்கிணைக்கப்படும். முதல் முறையாக அல்ட்ரா டூ பாட்டில்கள் 100% மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக்களால் தயாரிக்கப்படும்.

இது குறித்து கார்னியர், லே’ஓரியல் – குளோபல் பிராண்ட் தலைவர், ஏட்ரியன் கோஸ்காஸ் கூறுகையில் ‘அழகு சாதனங்கள் தயாரிக்கும் உலகின் முன்னணி பிராண்ட்களுள் ஒன்றான கார்னியர் நிறுவனம் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்காத நிலையான அழகுக்கான அணுக்கம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், இந்தப் பூமியின் மீது ஆக்கப்பூர்வ விளைவை ஏற்படுத்த உதவும் தனித்துவமான வாய்ப்பைப் பெற்றுள்ளது. உங்களுக்கும், பூமிக்கும் நலமளிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், கார்னியர் க்ரீன் ப்யூட்டியுடன் அழகுத் துறையின் இயக்கத்தை மாற்ற விரும்புகிறோம். பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் உள்ளிட்ட சமூக அமைப்புகளுடன் கைகோர்த்து பூமியின் மீது ஆக்கப்பூர்வ விளைவை ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளோம். அந்த வகையில் பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் அமைப்புடனான கூட்டாண்மை மூலம் எங்களது மைல்கல் சாதனையாகச் சென்னையில் பிரத்யேகப் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு மையத்தைத் திறந்துள்ளோம்.

Launch