வரும் ஆண்டுகளில் விளையாட்டு துறைக்கு அதிக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வரும் ஆண்டுகளில் விளையாட்டு துறைக்கு அதிக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கத்தின் சார்பில் 100 அணிகள் 1200 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கிற்கும் மாநில அளவிலான மாபெரும் இளைஞர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தொடர் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி உள்ளது.
இன்று தேதி முதல் 27ஆம் தேதி வரையில் 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்பொழுது நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழகத்தின் விளையாட்டு துறைக்கு கடந்த ஆண்டுகளை காட்டிலும் வரும் ஆண்டுகளில் கூடுதல் நிதி ஒதுக்கி விளையாட்டு துறையை மேம்படுத்தப்படும் என்றும் மாவட்ட அளவில் விளையாட்டு துறைக்கான பயிற்சியாளரை நியமனம் செய்வதற்கும் விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றாலே தேர்வு நடத்தாமல் அரசு வேலை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் வீர மாணவர்கள் மட்டுமே விளையாடக்கூடிய கைப்பந்து போட்டியை உயர்ந்த இடத்திற்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி தோல்விகள் பற்றி கவலைப்படாமல் போட்டிகளில் அனைவரும் பங்கேற்று விளையாட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கத்தின் தலைவருமான கௌதம் சிகாமணி, திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், மாநில கைப்பந்து சங்கத்தின் தலைவர் ஜெயமுருகன், தமிழ் நாடு மாநில கைப்பந்து சங்கத்தின் வாழ்நாள் தலைவர் அர்ஜுன் துறை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Sports