எச்சிஎல் (HCL) மற்றும் எஸ்ஆர்எஃப்ஐ (SRFI) ஆகியவை இணைந்து சென்னையில் 21வது ஆசிய ஜூனியர் அணி சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகின்றன

எச்சிஎல் (HCL) மற்றும் எஸ்ஆர்எஃப்ஐ (SRFI) ஆகியவை இணைந்து சென்னையில் 21வது ஆசிய ஜூனியர் அணி சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகின்றன

சென்னை, பிப்ரவரி 07, 2023: உலக அலவில் முன்னணி நிறுவனமான எச்சிஎல், ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவுடன் (எஸ்ஆர்எஃப்ஐ) இணைந்து, அதன் 21வது ஆசிய ஜூனியர் அணி சாம்பியன்ஷிப்பை சென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் & டிரையத்லான் அகாடமி பிப்ரவரி 8, 2023 முதல் தொடங்க உள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்தப்போட்டியில் சீன தைபே, ஹாங்காங் (சீனா), ஜப்பான், கொரியா, குவைத், மலேசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய 10 ஆசிய நாடுகள் பங்கேற்க உள்ளது. இந்த ஆண்டையும் சேர்த்து, சென்னை ஐந்து முறை சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தியுள்ளது. அனைத்து போட்டிகளும் எஸ்ஆர்எஃப்ஐ ஃபேஸ்புக் பக்கம் (www.facebook.com/indiasquash) மற்றும் எச்சிஎல் இன் ஸ்போர்ட்ஸ் ஃபேஸ்புக் பக்கம் (https://www.facebook.com/HCLForSports/) மற்றும் யுடியூப் சேனலில் (www.youtube.com/user/HCLEnterprise ல் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

இந்திய அணியை கிருஷ்ணா மிஸ்ரா (ஆசிய ரேங்க் 7 (பியு19), பார்த் அம்பானி (ஆசிய ரேங்க் 22 (பியு19)), ஷரன் பஞ்சாபி (ஆசிய ரேங்க் 31 (பியு19) மற்றும் ஷௌர்யாபாவா (ஆசிய தரவரிசை 2 (பியு19) ஆகியோர் ஆண்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். பெண்கள் அணியின் பிரிவில் யு17 சாம்பியன் அனாஹத் சிங் (ஆசிய ஜூனியர் ரேங்க் 3 (ஜியு17), பூஜா ஆர்த்தி ஆர் (ஆசிய ஜூனியர் ரேங்க் 7 (ஜியு19), தியானா பரஸ்ரம்பூரியா (ஆசிய ஜூனியர் ரேங்க் 5 (ஜியு17)) மற்றும் யுவ்னா குப்தா (ஆசிய ஜூனியர் தரவரிசை 42 (ஜியு19) ஆகியோர் பெருமை சேர்த்துள்ளனர்.

Sports