இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டம் 2023 வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது

முன்மாதிரி திட்டத்திற்கு 85 சதவீத நிதியுதவியை மார்ட்டின் அறக்கட்டளை வழங்கியது
நாடு முழுவதும் 3500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக (PICO)செயற்கைக்கோள்கள் சவுண்ட் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது
சென்னை, பிப்ரவரி 19, 2023: இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் சவுண்டிங் ராக்கெட், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பட்டிபுலம் கிராமத்தில் இருந்து பிப்ரவரி 19-ம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (கூடுதல் பொறுப்பு) டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ-ISRO) முன்னாள் விஞ்ஞானியும், இஸ்ரோ செயற்கைக்கோள் மையம் (ஐ.எஸ்.ஏ.சி.-(ISAC)) மற்றும் இந்திய ரிமோட் சென்சிங் மற்றும் சிறிய ரக, அறிவியல் மற்றும் மாணவர்களுக்கான செயற்கைகோள்கள் (IRS&SSS) திட்ட இயக்குநருமான பத்மஸ்ரீ ஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை, ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் மேகலிங்கம், மார்ட்டின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் Dr.Rtn எம்.லீமா ரோஸ் மார்ட்டின், மார்ட்டின் குழுமங்களின் நிர்வாக இயக்குநர் Dr.ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை- ஹவுஸ் ஆஃப் கலாம், ராமேஸ்வரம் நிர்வாக அறங்காவலர் ஏ.பி.ஜெ.எம்.நஜீமா மரைக்காயர், அப்துல் கலாம் பேரன்களும், அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை- ஹவுஸ் ஆஃப் கலாமின் இணை நிறுவனர்களான ஏ.பி.ஜெ.எம்.ஜெ. ஷேக் தாவூர், ஏ.பி.ஜெ.எம்.ஜெ. ஷேக் சலீம் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மார்ட்டின் அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனம் மற்றும் அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களால் சவுண்ட் ராக்கெட் வடிவமைத்து உருவாக்கப்பட்டது. மேலும் வெவ்வேறு பே லோட்களை கொண்ட சிறிய ரக 150 செயற்கைக்கோள்களும் தயாரிக்கப்பட்டன.
இத்துடன் 100 தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடன் மறு பயன்பாட்டு ராக்கெட் (reusable rocket) தயாரிக்கப்பட்டுள்ளது. இதர மாணவர்கள் செயற்கைக்கோள்களை உருவாக்கினர். சவுண்ட் ராக்கெட்டில் இருந்து ஏவப்படும் இந்த செயற்கைக்கோள்களில் இருந்து வானிலை மற்றும் வளிமண்டல நிலை மற்றும் கதிர்வீச்சு தன்மை குறித்து ஆராய்ச்சி தகவல்களை பெற முடியும்.
மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டம் 2023 வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Launch