ஐ.ஐ.டி.களில் தொடரும் தற்கொலைகள்:கையில் தீ பந்தங்களுடன்கண்டன ஆர்ப்பாட்டம்

ஐ.ஐ.டி.களில் தொடரும் தற்கொலைகள்:
கையில் தீ பந்தங்களுடன்
கண்டன ஆர்ப்பாட்டம்


சென்னை, பிப்.21-
மத்திய அரசின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.களில் தொடரும் மாண
வர்கள் தற்கொலையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.
சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமையில்
சென்னை ஐ.ஐ.டி. அருகே, மத்திய கைலாஷ் பஸ் நிறுத்தத்தில்
தீ பந்தங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர்
காங்கிரஸ் மாநில தலைவர்
சின்னத்தம்பி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், எம்.
பி.ரஞ்சன்குமார் கூறும்போது, “பா.ஜ.க. ஆட்சி அமைந்தது
முதல் மத்திய அரசின் தொழில்நுட்ப நிறுவனங்களில் 122
மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில் 71 பேர்
தாழ்த்தப்பட்ட மாணவர்கள். 2024-ல் ராகுல் காந்தி தலை
மையில் அமைக்கும் காங்கிரஸ் ஆட்சியின் மூலம் இதற்கு
நிரந்தர தீர்வு காண்போம்” என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர்கள் விஜயசேகர்,
ரஞ்சித்குமார், மாவட்டத்தலைவர் அடையாறுதுரை, மாநில
பொதுக்குழு உறுப்பினர் உமாபாலன், சிறுபான்மையினர்
பிரிவு மாநில துணைத் தலைவர் ஐ.ஸ்டீபன், எஸ்.சி.பிரிவு
மாநில துணைத்தலைவர்கள் செ.நிலவன், வக்கீல் சுரேஷ்
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Political