சென்னை முகப்பேர் தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

சென்னை முகப்பேர் தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

சென்னை முகப்பேர் தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பொதுச் செயலாளர் காசிநாதன்துறை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைப்பதாக கூறினார்.2021 இல் திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் யோக கல்விப்பயன்றவர்களுக்கு ஒரு நல்ல விடிவு காலம் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு தமிழகத்தில் உள்ள இரண்டரை லட்சம் யோககலை பயின்றவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தோம். அதன் அடிப்படையில் திமுக அரசு வெற்றி பெற்றிருந்தாலும் இதுவரைக்கும் வாய் திறக்கவில்லை அது எங்களுடைய சங்கத்திற்கு மிகவும் மன வருத்தமாக இருக்கிறது. ஏனென்றால் அதிமுக ஆட்சியில் 13,000 யோகா ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தனர்.ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருந்ததால் நாங்கள் திமுகவுக்கு வாக்களிக்கும் நிலைமை ஏற்பட்டது.ஆனால் இன்று வரைக்கும் எங்களுக்கு எந்த ஒரு முடிவும் ஏற்படாமல் உள்ளது.மாண்புமிகு விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்-பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து வந்துள்ளார்கள் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் அளித்தது போல யோகா துறைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும் யோகா ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். அதேபோல விளையாட்டு துறையிலும் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.மேலும் மத்திய அரசு யோக பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆயிற்று என்று தெரியவில்லை அதனை வெளிக்கொண்டு வரவேண்டும்.என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து. ஜீன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடும் இந்த தருவாயில் ஜூன் 20ஆம் தேதி சென்னையில் மாபெரும் பேரணியாக சென்று தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம் என்று தெரிவித்தார் தமிழகத்தில் மட்டும் இரண்டரை லட்சம் பேர் யோகா ஆசிரியர்கள் இருக்கிறார்கள். தமிழக அரசு இதுவரைக்கும் பல்வேறு பள்ளிகளுக்கு யோகா ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நியமிக்க தனிதீர்மானம் நிறைவேற்ற வேண்டும். என்று எங்கள் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர்களுக்கு வேண்டுகோள் வைக்கின்றோம் என்று அவர் தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்ட யோகா ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களின் குறை நிறைகளை பற்றி விவாதித்தனர். உடன் திருமதி.ராஜேஸ்வரி இளங்கோ, திருமதி ஜோதிலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Sports