வி ஆர் ஃபார் ஹாக்கி அமைப்பு தனது பெயரில் 18 வயதுக்கு கீழ் under 18உள்ள பெண்களுக்கு பயிற்சி அளித்து , ஹாக்கி விளையாட்டில் முன்னேற்றம் ஏற்படுத்தி வருகிறது .

வி ஆர் ஃபார் ஹாக்கி அமைப்பு தனது பெயரில் 18 வயதுக்கு கீழ் under 18உள்ள பெண்களுக்கு பயிற்சி அளித்து , ஹாக்கி விளையாட்டில் முன்னேற்றம் ஏற்படுத்தி வருகிறது .

வி ஆர் ஃபார் ஹாக்கி (We are for Hockey) என்ற அமைப்பு தமிழ்நாடு அரசு சங்கங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகும்.
இச்சங்கமானது பெண்களின் ஹாக்கி விளையாட்டில் மறுமலர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகிறது .

வி ஆர் ஃபார் ஹாக்கி ( We are for Hockey) அமைப்பு தனது பெயரில் 18 வயதுக்கு கீழ் (under 18) உள்ள பெண்களுக்கு பயிற்சி அளித்து , ஹாக்கி விளையாட்டில் முன்னேற்றம் ஏற்படுத்தி வருகிறது .

இதன் தொடர்ச்சியாக வி ஆர் ஃபார் ஹாக்கி டிராபி ( ( We are for Hockey Throphy) என்ற பெயருடன் விளையாட்டுப் போட்டியை சென்னை எழும்பூர் இராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் நடத்தியது .
இப்போட்டியில் சென்னை ஐ.சி.எப் பள்ளி , சென்னை வித்யாலயா பள்ளி, வேலூர் கார்னாப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி , ஆவடி ஐ.எச் . எம் பள்ளி , கோவை சச்சிதானந்தா ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளி , அடையார் கிளப் , செயிண்ட் தெரேசா , சூரப்பட்டு வேலம்மாள் பள்ளி என எட்டு அணிகள் விளையாட்டில் கலந்து கொண்டன .

இதில் வேலூர் கார்னாம்பேட் அரசு மேல்நிலைப் பள்ளி அணி முதல் இடத்தையும் கோவை சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி அணி இரண்டாவது இடத்தையும் சென்னை ஐ.சி.எப் பள்ளி அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தொடர்வோம் அறக்கட்டளை நிறுவனரும் திரைப்பட இயக்குனருமான டாக்டர் தொடவோம் கார்த்திக் , பிகில் பட நடிகையும் விளையாட்டு வீராங்கனைமான இந்துஜா , மாநில விளையாட்டு ஆணையத் துணைச் செயலர் எஸ் . கார்த்திக் , பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை எதிர்ப்பாளர் டாக்டர் ஜி . ராதிகா, முன்னாள் சர்வதேச ஹாக்கி விளையாட்டு வீரர் செல்வராஜ் திருமால் வளவன் , சென்னை ஹாக்கி சங்க செயலாளர் உதயகுமார் , பொருளாளர் லட்சுமி நாராயணன் , சர்வதேச ஹாக்கி விளையாட்டு நடுவர் மொகுல் முகமது முனீர் மற்றும் வி ஆர் ஃபார் ஹாக்கி (We are for Hockey) ஒருங்கிணைப்பாளர்கள் ,நிர்வாகிகள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

வெற்றி பெற்ற அணியினருக்கு சான்றிதழ்களும் , நினைவு பரிசுகளும் வழங்கப்ட்டன.
மேலும் இப்போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Sports