ஆக்மி 2023 – இந்தியாவின் முதன்மையான இயந்திரக் கருவிகள் கண்காட்சிதமிழக ஆளுநர் திரு.ஆர்.என். ரவி அவர்கள் தொடங்கி வைத்தார்

ஆக்மி 2023 – இந்தியாவின் முதன்மையான இயந்திரக் கருவிகள் கண்காட்சிதமிழக ஆளுநர் திரு.ஆர்.என். ரவி அவர்கள் தொடங்கி வைத்தார்

ஆக்மி 2023 – இந்தியாவின் முதன்மையான இயந்திரக் கருவிகள் கண்காட்சி
தமிழக ஆளுநர் திரு.ஆர்.என். ரவி அவர்கள் தொடங்கி வைத்தார்

அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இந்தியாவின் முதன்மையான இயந்திரக் கருவிகளின் கண்காட்சியான ஆக்மி 2023, சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்கியது. இன்று முதன் ஜூன் 19 வரை இக்கண்காட்சி 5 நாட்கள் நடைபெறுகிறது. நாட்டில் தொழில்துறையை நவீனப்படுத்துவதற்கும் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு உதவும் நோக்கில் இயந்திர கருவி தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களைக் காட்சிப்படுத்துவதில் இக்கண்காட்சி கவனம் செலுத்தியுள்ளது.

தமிழக ஆளுநர் திரு ஆர். என். ரவி அவர்கள், ஆக்மி 2023 கண்காட்சியினை இன்று தொடங்கி வைத்தார். டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சத்யகம் ஆர்யா மற்றும் ஷங்க் இன்டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் திரு. சதீஷ் சதாசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு டி. நலங்கிள்ளி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மேலும் ஆக்மி 2023 இன் தலைவர் திரு K. சாய் சத்ய குமார் அவர்கள் கண்காட்சி பற்றிய சுருக்கமான விளக்கக்காட்சியை வழங்கி உரையாற்றினார்.
ஆக்மி 2023 கண்காட்சியின் தலைவர் திரு K. சாய் சத்ய குமார் அவர்கள் பேசுகையில், “உலகெங்கிலும் உள்ள சமீபத்திய உற்பத்தி தொழில்நுட்பத்தை பற்றி உள்ளூர் நிறுவனங்கள் அறிந்து கொள்ளவும், தங்களது உற்பத்தி செயல்முறையை மேம்படுத்துவற்கும், ஆக்மி 2023 கண்காட்சி மிகப்பெரிய தளத்தை உருவாக்கி தந்துள்ளது. பொறியாளர்கள், மேலாண்மை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உற்பத்தியில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களுக்கும் இக்கண்காட்சி மிகவும் பொருத்தமானது.” என்று கூறினார்.
தமிழக ஆளுநர் திரு ஆர். என். ரவி அவர்கள் ஆக்மி 2023 கண்காட்சி மலரை வெளியிட்டு உரையாற்றினார். ஆக்மி 2023 கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு P. S. ரமேஷ் நன்றியுரை ஆற்றிய பிறகு, ஆளுநர் பல்வேறு கண்காட்சி அரங்குகளுக்குச் சென்று பார்வையிட்டு உற்பத்தியாளர்களுடன் உரையாடியானார் . ஆக்மி 2023 கண்காட்சி 11,000 சதுர மீட்டர் பரப்பளவில், மாநாட்டு மையம், ஏழு அரங்குகளில், 435 சர்வதேச நிறுவனங்கள், 105 சர்வதேச பிராண்டுகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. மேலும் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவில் உள்ள பல நாடுகள் பங்கேற்பால் சுமார் 650 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 15 முதல் 19 தேதி வரை நடைபெறும் ஆக்மி 2023 கண்காட்சியினை, காலை 10.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை வணிக பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.

Business