கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் தீவிர வயிற்றுப் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் திறப்பு

கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் தீவிர வயிற்றுப் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் திறப்பு

சென்னை, ஜூலை 26 2023:சென்னையில் முன்னணி பன்னோக்கு மருத்துவமனையாக திகழும் கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் தீவிர வயிற்றுப் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை கூடுதல் தலைமை செயலர், சென்னை பெருமாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அலோக் குல்லர், இம்மருத்துவமனையின் இயக்குனரும், புற்றுநோய் மையத்தின் தலைவரும், புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ராஜாசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
50 சதவீதத்துக்கும் அதிகமான கருப்பை புற்றுநோய், 30 முதல் 50 சதவீத வயிற்று புற்றுநோய் மற்றும் 20 சதவீத பெருங்குடல் புற்றுநோய் வயிற்று குழியின் பெரிட்டோனியல் என்னும் வயிற்று அறையின் மேற்பரப்பில் பரவுகிறது. இந்த வகை புற்று நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல ஆண்டுகளாக கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது அவர்களின் உயிர்வாழும் விகிதத்தை 1 முதல் 2 ஆண்டுகள் அதிகரிக்க உதவுகிறது. சைட்டோரேடக்டிவ் அறுவை சிகிச்சை மற்றும் ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி போன்ற தீவிரமான அறுவை சிகிச்சை போன்றவற்றின் காரணமாக, இந்த நோயாளிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் 5 ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ்கின்றனர்.

இது குறித்து கூடுதல் தலைமை செயலர், சென்னை பெருமாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இன்ட்ராபெரிட்டோனியல் வயிற்றுப் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு அதிக துல்லியமான மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களோடு நவீன உள்கட்டமைப்பு வசதிகளும் தேவைப்படுகிறது. கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள இந்த ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் மேம்பட்ட மற்றும் உயர்தர புற்றுநோய் பராமரிப்பு மற்றும் சிகிச்சையை வழங்குவதில் மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்புக்கு மேலும் ஒரு சிறப்பாகும் என்று தெரிவித்தார்.

Health