ஒன்றிய பாஜக அரசின் விசாரணை ஏஜென்சிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டித்து சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!

ஒன்றிய பாஜக அரசின் விசாரணை ஏஜென்சிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டித்து சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!

ஒன்றிய பாஜக அரசின் விசாரணை ஏஜென்சிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டித்து சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!

அரசியல் பழிவாங்கும் மற்றும் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஒன்றிய அரசின் ஏவல் நடவடிக்கையாக, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது பாரூக் உள்ளிட்டவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஒன்றிய அரசின் இந்த சோதனை நடவடிக்கையை கண்டித்தும், ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் விசாரணை ஏஜென்சிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டித்தும், சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் இன்று (ஜூலை 28) மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயலாளர் ஏ.கே.கரீம், மாநில செயற்குழு உறுப்பினர் முகமது ரஷீத், சென்னை வடக்கு மண்டல செயலாளர் இஸ்மாயில் மற்றும் ஒருங்கிணைந்த சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வழ.பசும்பொன்பாண்டியன், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஹைதர் அலி, தமுமுக மூத்த தலைவர் குணங்குடி அனீபா, ஜம்மியத்துல் உலமா ஹிந்த் மாநில தலைவர் மன்சூர் காஷிபி, தமிழ்த்தேச விடுதலை இயக்கத் தலைவர் தோழர் தியாகு, மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பேரா த.ஜெயராமன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் அசாருதீன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில பேச்சாளர் மாரிமுத்து, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழ. சு.மில்டன், தமிழ்தேச மக்கள் முன்னணி தலைவர் செந்தில், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் அபுபைசல், முஸ்லிம் முன்னணி கழகத்தின் தலைவர் கோவை செய்யது, தேசிய தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன், ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் மாநில பொதுச்செயலாளர் சேப்பாக்கம் அப்துல்லா உள்ளிட்டவர்கள் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் விசாரணை ஏஜென்சிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டித்து உரையாற்றினர்.   

எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசுகையில்; “என்ஐஏ.வின் சோதனை நடவடிக்கை என்பது முற்றிலும் அரசியல் பழிவாங்கும் மற்றும் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஒன்றிய அரசின் ஏவல் நடவடிக்கையாகும். கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் நல அரசியலை முன்னெடுத்துவரும் எஸ்.டி.பி.ஐ. கட்சி மக்கள் நலனுக்காக களத்தில் முன்னணியில் நின்று போராடிக்கொண்டிருக்கிறது. மக்கள் பிரச்சினைகளை ஆளும் அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதில் முன்னணியில் இருக்கின்றது. ஆளும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. கட்சி சமரசமின்றி தொடர்ந்து போராடிவருகிறது. பாஜக அரசுக்கு சிம்ம சொப்பணமாக அதன் ஒவ்வொரு மக்கள்விரோத நடவடிக்கைகளையும் தோலுரிக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியை பழிவாங்கும் நடவடிக்கையை அதன் கைப்பாவை ஏவல் அமைப்புகள் மூலமாக ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டுவருகின்றது. பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை என்ற கொள்கை முழக்கத்தோடு ஜனநாயக முறையில் செயல்பட்டுவரும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அரசியல் நிலைப்பாடு மிகத் தெளிவானது.

மக்கள் நலனுக்கான அரசியலில் வீரியமாக ஈடுபடும் எஸ்.டி.பி.ஐ. கட்சியை மக்கள் மத்தியில் களங்கப்படுத்தும் எண்ணமே இந்த சோதனையாகும். இத்தகைய கேடுகெட்ட அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. எஸ்.டி.பி.ஐ. கட்சி அதன் வலுவான ஜனநாயக நடவடிக்கைகளின் மூலமாக பாஜக அரசின் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடிக்கும். ஒருபோதும் நெருக்கடிகளின் மூலமாக அதன் அரசியல் செயல்பாடுகளை ஒடுக்கிவிட முடியாது. சோதனைகள் மூலம் இன்னும் வீரியமாகவே களமாடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி மட்டுமின்றி பாஜகவுக்கு எதிரான அரசியல் நிலைபாடு கொண்ட கட்சிகள், சிறுபான்மை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை தனது கைப்பாவை அமைப்புகளான என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்டு அச்சுறுத்தி வருகின்றது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு எதிர்த்து நின்று குரல் கொடுக்க வேண்டும். தேசத்தின் ஜனநாயகத்தை காக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

District News