சென்னை, ரேடியல் சாலை, காவேரி மருத்துவமனையில்
ஹார்ட் இன்ஸ்டிடியூட் (இருதய சிகிச்சை மையம்) திறப்பு
தமிழ்நாடு அரசின் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன், காவேரி மருத்துவமனையின் ஹார்ட் இன்ஸ்டிடியூட் (இருதய சிகிச்சை மையத்தை) திறந்து வைத்தார்.
1 ஆகஸ்ட், 2023: சென்னை: சென்னை, ரேடியல் சாலையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் அதிக எதிர்பார்ப்புகள் பெற்ற விரிவான இதயநல சேவைகளை வழங்குவதற்கான காவேரி “ஹார்ட் இன்ஸ்டிடியூட்” 2023 ஆகஸ்ட் 1-ம் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச தரத்தில் இதயம் மற்றும் இரத்தநாளம் தொடர்பான சிகிச்சைகளையும், இந்த நவீன சிகிச்சை மையம் முழுமையாக வழங்கும்.
தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வு துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன், இதன் தொடக்கவிழா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இதயநல சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த அவர், இங்கு வழங்கப்படுகின்ற மிக நவீன இதயநல சேவைகள் பற்றி மருத்துவ நிபுணர்களுடன் கலந்துரையாடி அறிந்துகொண்டார். நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சையை வழங்குவதில் தனித்துவ நிபுணத்துவம் கொண்டிருக்கும் காவேரி மருத்துவமனை ரேடியல் சாலை இப்புதிய சிகிச்சை மையமும், அதே உயர் அளவிலான சேவைகளை வழங்கி, குணப்படுத்தும் மற்றும் உயிர்காக்கும் பணியை சிறப்பாக செய்யும் என்ற தனது நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். உலகின் மிகச்சிறந்த மருத்துவமனைகளுக்கே இணையான உயர்தர இதயநல சிகிச்சையை வழங்குவதில் காவேரி மருத்துவமனை கொண்டிருக்கும் பொறுப்புறுதிக்கு மாண்புமிகு அமைச்சரின் பாராட்டும், அங்கீகாரமும் நேர்த்தியான சான்றாக திகழ்கின்றன சுகாதார பராமரிப்பு உட்கட்டமைப்பு வசதிகளில் நம் நாட்டில் தமிழ்நாடு மாநிலம் கொண்டிருக்கும் தலைமைத்துவ நிலையை காவேரி மருத்துவமனையின் இப்புதிய ஹார்ட் இன்ஸ்டிடியூட் மேலும் வலுப்படுத்தும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.