பிரசாந்த் மருத்துவமனைகளில் ‘உலக தாய்ப்பால் வாரம்’ கொண்டாட்டம்

பிரசாந்த் மருத்துவமனைகளில் ‘உலக தாய்ப்பால் வாரம்’ கொண்டாட்டம்

பிரசாந்த் மருத்துவமனைகளில் ‘உலக தாய்ப்பால் வாரம்’ கொண்டாட்டம்

தாய்ப்பாலின் பயன் குறித்து வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துல்

சென்னை, ஆக.7,2023:உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தை கடைபிடிப்பதன் காரணமாக இது சமுதாயத்தில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதை வலியுறுத்தும் விதமாக சென்னையில் உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையான பிரசாந்த் மருத்துவமனைகளில் ‘தாய்ப்பால் ஊட்டுவதை வலியுறுத்துதல்–வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு வித்தியாசத்தை ஏற்படுத்துதல்’ என்ற தலைப்பில் ஒரு வாரகால விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரசாந்த் மருத்துவமனைகளின் குழந்தை மருத்துவ துறைத் தலைவர் டாக்டர் விஜயகுமார் கூறுகையில், தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக பல்வேறு தவறான எண்ணங்கள் இன்று பல பெண்களிடம் நிலவுகிறது. குறிப்பாக வேலைக்கு செல்லும் தாய்மார்களிடமும், புதிதாக குழந்தை பெற்றவர்களிடமும் அது அதிக அளவில் காணப்படுகிறது. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எங்களின் இந்த ஒரு வார கால நிகழ்ச்சி நடைபெற்றது. இளம் பெற்றோருக்கு தாய்பாலின் மகத்துவம் குறித்தும், தாய்ப்பால் கொடுப்பதால் தங்களுக்கும் குழந்தைகளுக்கும் கிடைக்கும் பலன்கள் குறித்தும் விரிவாக இந்த நிகழ்ச்சி மூலம் வலியுறுத்தி கூறப்பட்டது. இது தொடர்புடைய பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்ற அமர்வுகளும் நடைபெற்றன. இதன் காரணமாக தாய்ப்பாலூட்டுவது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டதோடு, முழு குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்கும் சிறந்ததொரு நிகழ்ச்சியாக இது அமைந்தது என்று தெரிவித்தார்

Health