சென்னையில் ‘உலக உறுப்பு தான தின’ வாக்கத்தான் ஆசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அன்ட் யூரோலஜி மருத்துவமனை சார்பில்

சென்னையில் ‘உலக உறுப்பு தான தின’ வாக்கத்தான் ஆசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அன்ட் யூரோலஜி மருத்துவமனை சார்பில்

சென்னையில் ‘உலக உறுப்பு தான தின’ வாக்கத்தான் ஆசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அன்ட் யூரோலஜி மருத்துவமனை சார்பில்

பெசன்ட் நகரில் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடைபெற்றது

சென்னை, ஆக. 12, 2023: உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் மற்றவர்களின் வாழ்க்கை எவ்வாறு மேம்படுகிறது என்பது குறித்தும் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்தும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13–ந்தேதி ‘உலக உறுப்பு தான தினமாக’ உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவின் முன்னணி சிறுநீரக பராமரிப்பு மையமாகவும், சென்னையின் மிகப்பெரிய சிறுநீரக சிகிச்சை மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சையில் முன்னணி மருத்துவமனையாக விளங்கும் ஆசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அன்ட் யூரோலஜி மருத்துவமனை சார்பில் பெசன்ட் நகரில் வாக்கத்தான் நடைபெற்றது.   

இந்த வாக்கத்தானை இம்மருத்துவமனையின் மூத்த நிர்வாகிகள் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கைகளில் உறுப்பு தானம் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகள் மற்றும் பேனர்களுடன் பெசன்ட் நகரில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த வாக்கத்தானில் இம்மருத்துவமனையில் வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 பேர் கலந்து கொண்டு, அறுவை சிகிச்சைக்குப் பிறகு தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அங்கு இருந்தவர்களிடம் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

இது குறித்து இம்மருத்துவமனையின் சிறுநீரகவியல் பிரிவு ஆலோசகர் டாக்டர் நவிநாத் கூறுகையில், உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை தனிநபர்களிடம் எடுத்துக் கூறுவதற்காக இந்த உற்சாகமான வாக்கத்தானை நடத்துவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. சமுதாய முன்னேற்றம் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்காகவும் மக்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் அரசின் சார்பில் இந்த நிகழ்ச்சியை நாங்கள் நடத்துவது குறித்து பெருமிதம் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

Health