ஸ்டெம் செல் சிகிச்சை குறித்த விழிப்பணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்
சென்னையிலுள்ள டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் இன்டர்நேஷனல் ஆர்த்தோ கேர் சென்டரும், அமெரிக்காவில் ஸ்டெம் செல் சிகிச்சை ஆராய்ச்சியில் புகழ் பெற்ற நிறுவனமான ஜியோஸ்டார் நிறுவனமும் இணைந்து ஸ்டெம் செல் சிகிச்சை முறையை தமிழகத்தில் முதல்முறையாக சென்னையில் அறிமுகம் செய்தது.
வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் இன்று நடைபெற்ற இதன் துவக்க விழாவில் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் தனது வாழ்த்துரையில் கூறும்போது, குழந்தையின்மை, பாலியல் சிகிச்சையில் முன்னோடியான மருத்துவ தம்பதியர் டாக்டர் காமராஜ், டாக்டர் ஜெயராணி காமராஜ் ஆகியோரை பாராட்டுகிறேன். இந்த துறையில் இவர்கள் இருவரும் மிக சிறப்பாக செயலாற்றி மிக உயரிய மருத்துவத்தை குறைந்த கட்டணத்தில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் சிகிச்சையளித்து வருகிறார்கள்.
மருத்துவ உலகில் நவீன கண்டுபிடிப்புகள் சாதாரண மக்களையும் எளிதில் சென்றடைய வேண்டும். புரட்சிகரமான சிகிச்சையாக அறிமுகமாகும் ஸ்டெம் செல் தெரபி, குழந்தை இல்லாதவர்களுக்கும், மூட்டு வலி மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கும், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
ஸ்டெம் செல் தெரபி என்பது ரீ ஜெனரேடிவ் மருத்துவமாகும். ஸ்டெம் செல் என்ற சொல்லை தமிழில் சொல்ல வேண்டுமென்றால் Õஇளைய அணுÕ. அழிந்து வரும் திசுக்களை ஸ்டெம் செல் எனும் இளைய அணு மீளுருவாக்கம் செய்கிறது.
நடுத்தர வயதில் மூட்டு தேய்மானம் அடைவது சகஜம். அதற்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் இயல்பாக இயங்க வைக்க முடியும். இது மட்டுமல்லாமல் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை முறை பெரிதும் உதவும்.
எனவே ஸ்டெம் செல் கிசிச்சை முறையை மக்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
இதனைத்தொடர்ந்து ஸ்டெம் செல் சிகிச்சை தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய 24 மணி நேர சேவைக்கான தொடர்பு எண்.98412 66666 அறிமுகம் செய்து வைத்தார். ஒரு வார காலம் அதாவது 10.09.2023 வரை நடைபெறும் இலவச ஆலோசனை திட்டத்தையும் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வரவேறுபுரையாற்றிய ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய இயக்குனர் டாக்டர் ஜெயராணி காமராஜ் பேசுகையில், இந்த நவீன ஸ்டெம் செல் சிகிச்சை முறை குழந்தையின்மை மருத்துவத்தில் மிகப்பெரிய பங்காற்றுகிறது. இதன்மூலம் இனி யாருக்குமே குழந்தையில்லை என்ற கவலை இருக்காது என்றார்.
டாக்டர் காமராஜ் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் டி.காமராஜ் பேசுகையில், கட்டுப்படுத்த முடியாத முடி கொட்டுதல், சர்க்கரை நோய், நாள்பட்ட ஆறாத புண், குடல் அழற்சி, புற்றுநோய், குழந்தையின்மை, விந்தணு உற்பத்தி குறைபாடு, விறைப்புத்தன்மை குறைபாடு உட்பட பலவிதமான பாதிப்புகளுக்கு விரைவான சிறப்பான சிகிச்சையாக ஸ்டெம் செல் தெரபி அமையும் என்றார்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக பிரத்யேகமான நவீன ஸ்டெம் செல் சிகிச்சை முறையை டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்டர்நேஷனல் ஆர்த்தோ கேர் மையம், அமெரிக்காவைச் சேர்ந்த ஜியோஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம் என்றார் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
ஜியோஸ்டார் யூ.எஸ்.ஏ. மைய மருத்துவ இயக்குனர் டாக்டர் திலிப்குமார் ஜியோஸ்டார் நிறுவனத்தின் சிறப்பம்சங்களை பட்டியலிட்டார். குறிப்பாக கோவிட் காலத்தில் இந்த நிறுவனம் ஒன்றுதான் ஸ்டெம் செல் தெரபியை பயன்படுத்தி அமெரிக்காவில் கொரானாவுக்கு சிகிச்சையளிக்க அனுமதி பெற்ற ஒரே நிறுவனம் என்றார்.
விழாவின் முடிவில் டாக்டர் நிவேதிதா காமராஜ் நன்றி கூறினார்.
…………………