உயர்கல்வியில் பன்னாட்டுமயமாக்கல் மற்றும் கூட்டாண்மைகளுக்கான வாய்ப்புகள்! 

உயர்கல்வியில் பன்னாட்டுமயமாக்கல் மற்றும் கூட்டாண்மைகளுக்கான வாய்ப்புகள்! 

உயர்கல்வியில் பன்னாட்டுமயமாக்கல் மற்றும் கூட்டாண்மைகளுக்கான வாய்ப்புகள்! 

இதுபற்றி விவாதிக்க யுகே உயர்கல்வி துறையின் பிரதிநிதிகள் குழு 

தமிழ்நாட்டிற்கு வருகை 

சென்னை: 20 செப்டம்பர் 2023:  கலாச்சார உறவுகள் மற்றும் கல்வி வாய்ப்புகளுக்கான யுகே – ன் சர்வதேச அமைப்பான பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் யுகே – ன் பிசினஸ் மற்றும் வர்த்தகத்துறை (DBT), தமிழ்நாடு – யுகே உயர்கல்வி வட்டமேஜை நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கின்றன.  தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையின் பிரதிநிதிகள், யுகே பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விசார் தலைமை அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்நாட்டின் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 25 உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த உயர்நிலை கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு மற்றும் யுகே கல்வித்துறையைச் சேர்ந்த இப்பிரதிநிதிகள், வட்டமேஜை அமர்வின்போது உயர்கல்வி நிறுவனங்களின் பன்னாட்டு நாடுகடந்த கல்வியில் (TNE) வாய்ப்புகள் பற்றி தீவிர கலந்தாலோசனையை மேற்கொள்ளவிருக்கின்றன.  

கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமையாக்கம் ஆகியவற்றின் மீது இந்திய – யுகே பரஸ்பர உறவு முன்னுரிமை காட்டுகிறது.  இந்த ஆண்டு செப்டம்பர் 18 முதல் 22 வரை, 19 இந்திய மாநிலங்களில், இந்திய அதிகாரிகளுடனும், பல்கலைக்கழக தலைவர்களுடனும் கலந்துரையாடுவதற்காக யுகே – ன் 31 கல்வி நிறுவனங்கள் மற்றும் தலைமை அமைப்புகளை உள்ளடக்கிய யுகே – ன் பிரதிநிதிகள் குழு இந்தியாவிற்கு வந்து சேர்ந்திருக்கிறது.  இதுவரை இந்தியா வந்திருக்கும் இத்தகைய குழுக்களுள் இதுவே மிகப்பெரியது.  பிரிட்டிஷ் கவுன்சிலால் வழங்கப்படும் கோயிங் குளோபல் பார்ட்னர்ஷிப்ஸ் (CGP) மற்றும் யுகே – இந்தியா எஜுகேஷன் ரீசர்ச் இனிஷியேட்டிவ் (UKIERI) போன்ற முன்னெடுப்புகள் வழியாக இந்தியா மற்றும் கே – ன் கல்வி நிறுவனங்களுக்கிடையே கூட்டாண்மைகளை விரிவாக்குவது மீது இப்பிரதிநிதிகள் குழு கூர்நோக்கம் கொண்டிருக்கிறது.  

மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கே. பொன்முடி, தமிழ்நாடு – யுகே உயர்கல்வி வட்டமேஜை நிகழ்வை தொடங்கி வைத்தார்.  தமிழ்நாடு அரசின் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, யுகே அரசின் சர்வதேச கல்வி சேம்பியன் சர் ஸ்டீவ் ஸ்மித், சென்னையில் பிரிட்டிஷ் துணை ஹை கமிஷனர் திரு. ஆலிவர் பால்ஹேச்செட் MBE, பிரிட்டிஷ் கவுன்சிலின் கல்விக்கான இயக்குனர் மேடலைன் ஆன்செல்,  பிரிட்டிஷ் கவுன்சிலின் தெற்காசிய பிராந்திய இயக்குனர் ஆட்ரியன் சாட்விக் OBE, பிரிட்டிஷ் கவுன்சிலின் தென்னிந்தியாவிற்கான இயக்குனர் ஜனகா புஷ்பநாதன் ஆகியோர் முன்னிலையில் இத்தொடக்கவிழா நடைபெற்றது.

Education