உலக சேவை நாளை முன்னிட்டு லயன்ஸ் இன்டர்நேஷனல்  நடத்தும் சென்னை புளோகதான் 2023

உலக சேவை நாளை முன்னிட்டு லயன்ஸ் இன்டர்நேஷனல்  நடத்தும் சென்னை புளோகதான் 2023

சென்னை, அக்டோபர் 15, 2023: உலக சேவை நாளை முன்னிட்டு, லயன்ஸ் இன்டர்நேஷனல் மாவட்டம் 324 இன்று சென்னை புளோகதான் 2023 நிகழ்ச்சியை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. குப்பைக் கழிவுகள் வெளியேற்றுவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக நீக்கி உலக சாதனை படைத்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட சுமார் 11 ஆயிரம் பேர், தேசிய மாணவர் படை (என்எஸ்எஸ்), சாரணர் படை, வழிகாட்டிகள்,

தன்னார்வலர்கள், நிறுவன தன்னார்வலர்கள் ஆகியோர் சேர்ந்து பட்டினப்பாக்கம் கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை ஆகிய பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம் என்பதற்கான பிரசாரத்தை மேற்கொண்டது. இவர்களது ஆர்வமிகு பங்கேற்பால் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் பயனுள்ள மாற்றம் உருவாகும் என நம்பலாம்.

இத்தகைய சூழலில், சென்னை புளோகதான் 2023 நிகழ்ச்சியில் லயன்ஸ் மாவட்ட கவர்னர் பிஎம்ஜேஎப் லயன் ராஜேஷ் என் தேவானந்த், மாவட்ட தலைவர் லயன் மணிவண்ணன் உள்ளிட்டோருடன் சிறப்பு விருந்தினர்களாக சென்னை பெருநகர மேயர் திருமதி பிரியா, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தா.வேலு,  சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் டாக்டர். ராதாகிருஷ்ணன், 171 வார்டு கவுன்சிலர் தனபால் ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னை புளோகதான் 2023 நிகழ்ச்சியின் பிரதான நோக்கமே நகரை பசுமையாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பதாகும். சென்னை நகரை குப்பை இல்லா நகரமாக மாற்றுவதோடு ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகத்தை அறவே தவிர்ப்பதுமாகும். கழிவுகளை மறு சுழற்சி செய்வது மற்றும் சூழல் பாதுகாப்புக்கான மாற்று உத்திகளை எடுத்துரைப்பது ஆகியவையும் இதன் நோக்கமாகும். சென்னை லயன்ஸ் இன்டர்நேஷனல் மாவட்டம் 324 கே-யின் பிரதான இலக்கே சென்னை நகரை ஸ்திரமான வளர்ச்சியடைந்த நகராக பிற நகரங்களுக்கு முன்னுதாரணமாக மாற்றுவதே ஆகும். டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 92வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், லயன்ஸ் தெளிவான தூய்மையான சூழலை நிலைநிறுத்துவதற்கான அவரது பார்வையை நிறைவேற்றி வருகின்றன.

இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் இதன் முன்னாள் இயக்குநர் லயன் கே.ஜி. ராமகிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சர்வதேச இயக்குநர் லயன் ஆர். சம்பத், எப்விடிஜி லயன் முருகேஷ், எஸ்விடிஜி லயன் முருகன், பிடிஜி லயன் டாக்டர் என்.ஆர். தவே, பிடிஜி லயன் என்ஆர் தனபாலன் மற்றும் பிடிஜி லயன் ஜானி ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களின் பங்கேற்பு மூலம் லயன்ஸ் கிளப் உறுப்பினர்களின் சிறப்பான சமூக சேவை மற்றும் இந்த சமூகத்தில் மிகச் சிறந்த மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற அவர்களது பொறுப்புணர்வை தெரிந்துகொள்ளலாம்.

District News