அப்போலோ மருத்துவமனை உலக விபத்துக் காய அவசர சிகிச்சை தினத்தையொட்டி ரத்த இழப்பை நிறுத்துவது 

அப்போலோ மருத்துவமனை உலக விபத்துக் காய அவசர சிகிச்சை தினத்தையொட்டி ரத்த இழப்பை நிறுத்துவது 

அப்போலோ மருத்துவமனை உலக விபத்துக் காய அவசர சிகிச்சை தினத்தையொட்டி ரத்த இழப்பை நிறுத்துவது  குறித்து பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்த அழைக்கிறது!

இந்தியாவில் சாலை விபத்துகளில் தினமும் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்

வயது முதிர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்

ரத்த இழப்பை நிறுத்தும் மருத்துவ தொழில்நுட்பங்கள் நேரத்தைச் சேமித்து உயிர் காக்கும் அம்சமாகத் திகழ்வதாக மருத்துவகளால் போற்றப்படுகிறது

சென்னை, 17 அக்டோபர் 2023:  பல்வேறு விபத்துகளால் ஏற்படும் காயங்களின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முதலுதவி நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ரத்தக்கசிவு மற்றும் ரத்த இழப்பை நிறுத்தும் உத்திகள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை அழைப்பு விடுத்துள்ளது. இன்று (அக்டோபர் -17) உலக விபத்துக் காய அவசர சிகிச்சை தினத்தை (World Trauma Day) முன்னிட்டு அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை சேவைகள் பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவினர், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயிர் காக்கும் நடைமுறைகள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த அழைப்பு விடுத்துள்ளனர்.

ரத்த இழப்பை நிறுத்தும் நுட்பங்கள் என்ற தகவலைப் பரப்ப அப்போலோ மருத்துவர்கள் குழு ஒரு நேரடி செயல் விளக்கத்தையும் நிகழ்த்தியது.  மருத்துவ அவசரநிலைக்கு ஏற்ப, பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு நெறிமுறைகளின் தொகுப்பாக இந்த செயல் விளக்கம் அமைந்திருந்தது. பயிற்சி பெற்ற வல்லுநர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பு, ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் உரிய நடைமுறைகள், நேரத்தை மிச்சப்படுத்த உதவும் என்று குழு எடுத்துரைத்தது. இந்த உரிய இடைக்கால செயல்பாடு, விபத்துகளின்போது முக்கியமான முதலாவது மணிநேரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் இதன் மூலம் சுற்றி இருப்பவர்கள் ஒரு உயிரைக் காக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் சுனிதா ரெட்டி (Suneetha Reddy, Managing Director, Apollo Hospitals Group) இது குறித்துக் கூறுகையில், “தீவிர சிகிச்சை மற்றும் அவசர சேவைகள் பிரிவில் அப்போலோ மருத்துவமனை முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. எங்களிடம் திறமையான மருத்துவர்கள், திறமையாக முதல் உதவி அளிப்பவர்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய ஊழியர்கள் உள்ளனர், அவர்கள் பல்வேறு பகுதிகளில் சிக்கலான விபத்து சிகிச்சைகளை சமாளிக்கத் தயாராக உள்ளனர். நாங்கள் எங்கள் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளோம். பல வகையான விபத்துக் காயங்கள் மற்றும் ஒரு நபருக்கு ஒரே நேரத்தில் ஏற்படும் பல விதமான விபத்துக் காய சூழல்கள் போன்றவற்றை சமாளிக்க அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உள்கட்டமைப்பு அம்சங்களில் முதலீடு செய்துள்ளோம். 1066 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் கிடைக்கக் கூடிய எங்கள் அவசர கால மருத்துவ வாகன (ஆம்புலன்ஸ்) சேவைகள் அதிநவீன அம்சங்கள் கொண்டதாகும். இது எங்களது அவசரகால சிகிச்சை முன்முயற்சிகளின் முக்கிய பகுதியாகும். ஒரு சுகாதார சேவை வழங்கும் நிறுவனமாக நாங்கள் தொடர்ந்து இத்துறையின் முன்னேற்றங்களுக்கு ஏற்ப உரிய வேகத்துடன் எங்கள் ஊழியர்களை மேம்படுத்தி வருகிறோம். அதே வேளையில், ரத்தக்கசிவு மற்றும் ரத்த இழப்பை நிறுத்தும் நுட்பங்கள் குறித்து அதிகம் தெரிந்து கொண்டு விபத்துக் காயங்களின்போது விரைந்து உரிய முறையில் முதலுதவி செயல்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய சமூகத்தை உருவாக்க உதவுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.” என்றார்.

Health