பிரசாந்த் மருத்துவமனையின் ‘இளம் இதயங்களைக் காப்போம்” 2023 பிரச்சாரத்தின் பிரமாண்டமான நிறைவு விழா இன்று நடைபெற்றது.

பிரசாந்த் மருத்துவமனையின் ‘இளம் இதயங்களைக் காப்போம்” 2023 பிரச்சாரத்தின் பிரமாண்டமான நிறைவு விழா இன்று நடைபெற்றது.

சென்னை: அக்டோபர் 21, 2023:  சென்னை மாநகரில் முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக சேவையாற்றி வரும் பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ், “இளம் இதயங்களை காப்போம்” (‘Save Young Hearts’) 2023 டிஜிட்டல் பரப்புரை செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. 

மாரடைப்புகள், இதய பிரச்சனைகள்,  வராமல் தடுக்க இளம் தலைமுறையினர் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கும் வகையில், இதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்புடுத்தும் விதமாக 2022-ம்  ஆண்டில் ‘Save Young Hearts’ பெயரில் நடத்தப்பட்ட வெற்றிகரமான பரப்புரை செயல்திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் இதனை பிரசாந்த் மருத்துவமனை நடத்தியது.  மொத்தத்தில் இப்போட்டிக்கு 100-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.   மிகச் சிறப்பான முதல் இரண்டு படைப்புகளுக்கு தலா ருபாய் ஒரு லட்சம் மற்றும் ஐம்பது ஆயிரம் வழங்கினர்பிரபல தமிழ் நடிகர் விக்ரம் பிரபு, இந்நிகழ்வின் விருந்தினராக கலந்து கொண்டு ‘இளம் இதயங்களை காப்போம்’ என்ற செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட சிறிய வீடியோ (Insta Reels) போட்டியில் பங்கேற்றவர்களையும் மற்றும் விருதுகளை வென்றவர்களையும் மனமார பாராட்டினார்.  இதய ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்துவதிலும் மற்றும் இதயத்திற்கு நலமளிக்கும் வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் படைப்பாக்கத் திறனுடன் போட்டியாளர்கள் வழங்கிய சிறப்பான பங்களிப்புகளை அவர் மனமார பாராட்டி கௌரவித்தார். 

அதிகரித்து வரும் இதயநோய்கள் மற்றும் சிக்கல்களை மனதில் பதியுமாறு அழகாக சித்தரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியம் மீதான முக்கியத் தகவலை பிரமாதமாக வெளிப்படுத்தியிருந்த திரு .சிவமணி கண்ணன் – என்ற சாதனையாளருக்கு ரூ. 1 இலட்சம் என்ற சிறப்பான ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.  இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய முன்தடுப்பு நடவடிக்கைகள் மீது சிறப்பான வீடியோவை உருவாக்கியதற்காக திரு. ஜீவன்  என்ற நபருக்கு– இரண்டாவது பரிசான ரூ.50,000 என்ற ரொக்கத்தொகை வழங்கப்பட்டது.

Health