ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட மருதுபாண்டியர்களின் 222வது ஆண்டு நினைவு

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட மருதுபாண்டியர்களின் 222வது ஆண்டு நினைவு

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட மருதுபாண்டியர்களின் 222வது ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர். முத்துராமன் சிங்கப்பெருமாள் தலைமையில் மாலை அணிவித்து திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர். கந்தன்,மாநிலத் தலைவர் டாக்டர் அன்பு தேவேந்திரன், மற்றும் மாநிலச் செயலாளர் டாக்டர் சுரேஷ், டாக்டர் ஜெஸ்டின்,மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகத்தின் கழக பொதுச்செயலாளர் டாக்டர்.முத்துராமன் சிங்கபெருமாள் பேசுகையில் மருது பாண்டியர்கள் இந்திய நாடு அடிமைப்பட்டு கிடந்த காலத்தில் முதல் முதலாக குரல் கொடுத்தவர்கள் மருது பாண்டியர்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இவர்கள் இல்லை என்றால் இந்தியா விடுதலை அடைந்திருக்க வாய்ப்பே கிடையாது. அப்போது இருந்த ஆங்கிலேயர் ஆட்சியில் 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்டார்கள். அவர்களின் 222 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் நாங்கள் இந்த வீர வணக்கத்தை செலுத்துவதை பெருமை கொள்கிறோம் என தெரிவித்தார்.இதில் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

District News