Apé E-city FX NE Max என்னும் பயணிகளுக்கான 3-சக்கர மின்சார வாகனத்தை அறிமுகம்

Apé E-city FX NE Max என்னும் பயணிகளுக்கான 3-சக்கர மின்சார வாகனத்தை அறிமுகம்

Apé E-city FX NE Max என்னும் பயணிகளுக்கான 3-சக்கர மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளதன் மூலம் தமிழ்நாட்டின் முதன் மின்சார ஆட்டோவை பியாஜியோ வழங்குகிறது

சென்னை, 26 அக்டோபர் 2023: இத்தாலியைச் சேர்ந்த பிரபல வாகன நிறுவனமான பியாஜியோ குழுமத்தின் 100% துணை நிறுவனமான பியாஜியோ வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட் (PVPL), இந்தியாவின் முன்னணி சிறிய வணிக வாகன உற்பத்தியாளராகத் திகழ்கிறது. இந்நிறுவனம் புத்தம் புதிய பயணிகள் 3-சக்கர மின்சார வாகனம் Apé E-city FX NE Max ஐ தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. Apé E-city FX NE Max தமிழக மாநிலத்தில் உள்ள மாநில போக்குவரத்து ஆணையத்திடம் இருந்து ஒப்புதலைப் பெற்ற முதல் பியாஜியோ 3-சக்கர மின்சார வாகனமாகும். இப்புதிய வாகனத்தை பியாஜியோ வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு.டியாகோ கிராஃபி மற்றும் பியாஜியோ வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட், கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ், EVP – திரு. அமித் சாகர் ஆகியோர் வெளியிட்டனர்.
இந்தியாவின் 3W EV புரட்சியின் முன்னோடிகளாக, பியாஜியோ வெஹிக்கிள்ஸ் மீண்டும் தமிழ்நாட்டின் EV நிலப்பரப்பில் புரட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது, நகரின் முதல் 3W பயணிகள் வாகனமான EV – Apé E-city FX NE Max ஐ அறிமுகப்படுத்துகிறது. இந்த வாகனம் கடைசி மைல் பயணிகள் போக்குவரத்தை மாற்றியமைக்க உறுதியளிக்கிறது. இந்த EV ஆனது பியாஜியோவின் பாராமதி தொழிற்சாலையில் முற்றிலும் பெண்களைக் கொண்ட குழுவால் முழுமையாக அசெம்பிள் செய்யப்பட்டது.

Launch