தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு சார்பாக சென்னை மண்டல நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு சார்பாக சென்னை மண்டல நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு சார்பாக சென்னை மண்டல நிர்வாகிகள் கூட்டம் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளராக தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் தலைவர் செ.பால்பர்ணபாஸ் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாராட்டு விழாவாகவும் சென்னை அயனாவரத்தில் நடைபெற்றது.

இந்திய நுகர்வோர் சம்மேளனம் தேசிய பொதுச்செயலாளர் எம் .செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அகில இந்திய நுகர்வோர் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு இயக்கத் தலைவர் டி .சி. ஜான் இளங்கோவன் , மாநில நிர்வாக ஆலோசகர்கள் ஆர். நாராயணன் , முரளிதரன் , மாநில துணைத் தலைவர் ரவிச்சந்திரன், மாநில உதவி செயலாளர் டி.ஆப்ரஹாம் , இந்திய நுகர்வோர் சம்மேளனம் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வட சென்னை மாவட்டத் தலைவர் ஷேக் அலி , செய்தி தொடர்பாளர் ஜி. அருணகிரி , திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி தலைவி உமாதேவி, கரூர் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் , தென் சென்னை மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் , திருச்சி மாவட்ட தலைவி ஆ‌. லீமா சவரியம்மாள் , மதுரை மாவட்ட தலைவர் பொன் .ஆதிசேடன் , விழுப்புரம் மாவட்டத் தலைவர் வெங்கடேசன் , திருவள்ளூர் மாவட்ட மகளிரணி தலைவி உமாதேவி , சிவனேசன், சுகுமார் , வெண்ணிலா , ஆர்.தேவி, எம்.ஆர்‌. ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் செ. பால்பர்ணபாஸ். தெரிவித்ததாவது ;
மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பவர்களுக்கு கட்டண ரசீது வழங்கப்பட்ட வேண்டும். சிபாரிசு செய்யும் மருந்து மாத்திரைகளின் ஃபார்முலாவை டிஸ்கிரிப்ஷனில் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
நுகர்வோருக்கு மருத்துவர்ககள் கொடுக்கும் மருத்தினால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கட்டண ரசீது மட்டுமே நீதி மன்றத்தில் ஒரு சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும். ஆகவே நுகர்வோராகிய பொதுமக்களுக்கு கட்டண ரசீது பெறுவதில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதை தமிழக அரசு சுகாதாரத் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கண்காணிக்க வேண்டும் .
மற்றும் தேநீர் கடைகளில் எஃப் . எஸ்.சி.சி. ஐ லைசென்ஸ் பெறாமல் சிற்றுண்டி , மதிய உணவு விற்பனை செய்வதை உணவுத்துறை அதிகாரிகள் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

District News