மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் சென்னை மாநகரம் வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில் இந்த மாபெரும் இக்கட்டான சூழலில் எந்த ஒரு தனி நபரும் பசியோடு இருக்கக் கூடாது
என்கின்ற முயற்சியில் தினசரி மூன்று வேளையும் பசியாற்றல் சேவை செய்து வருகின்ற R.P. மிஷன் பவுண்டேஷன் அறக்கட்டளையும், கருணை உள்ளங்கள் அறக்கட்டளையும் இணைந்து மிக்ஜாம் புயல் தாக்கிய நாளிலிருந்து தினமும் 2000 நபர்களுக்கு உணவு வழங்கி வந்த நிலையில்,
தொடர்ந்து சென்னையின் நீர் மூழ்கிய நிலையில் உள்ள பகுதிகளில் இருப்பவர்களுக்கு கூடுதலாக உணவுப் பொட்டலங்கள் வழங்க வேண்டும் என்கின்ற முயற்சியில் இன்று: 10.12.2023 ல் மணிமங்கலம் , சமுத்திரபுரம், முடிச்சூர், வியாசர்பாடி, தண்டையார்பேட், துரைப்பாக்கம், ஆலந்தூர், பூந்தமல்லி, திருவெற்றியூர், திருநின்றவூர், பட்டாபிபுறம், மாங்காடு, சைதாப்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 10,000 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பொதுமக்கள் அனைவருடைய ஒத்துழைப்போடு தொடர்ந்து மழை வெள்ளத்திலிருந்து மீண்டெழாத பல்வேறு பகுதிகளில் இருப்பவர்களுக்கு உணவு வழங்குவதற்கு செயலாற்றி வருகின்றோம்.
மேலும் தொடர்புக்கு :
9566738366
ராஜேந்திர பிரசாத்
நிறுவனர், R.P. மிஷன் பவுண்டேஷன்.
www.rpmission.org
R.P. மிஷன் பவுண்டேஷன் திண்டிவனம் உட்பட்ட பல்வேறு கிராமப்புற தருமச்சாலைகள் மூலம் தினசரி 1000 பேருக்கு மூன்று வேளையும் பசியாற்றல் சேவை செய்து வருகின்றது.