சென்னையில் சிலை வைக்க இடம் வழங்க கோரி அனைத்து இந்திய லூயிஸ் பிரெய்ல் பார்வையற்றோர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் சிலை வைக்க இடம் வழங்க கோரி அனைத்து இந்திய லூயிஸ் பிரெய்ல் பார்வையற்றோர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்து முறையினை உருவாக்கிய லூயிஸ் பீரெய்லிக்கு சென்னையில் சிலை வைக்க இடம் வழங்க கோரி அனைத்து இந்திய லூயிஸ் பிரெய்ல் பார்வையற்றோர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து இந்திய லூயிஸ் பிரெய்ல் பார்வையற்றோர் சங்கத்தினர் 30 க்கும் மேற்பட்டோர் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மையங்கள் அமைப்பதற்கு ஆர்வமும் அனுபவமும் உள்ள தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு இடம் வழங்க சிறப்பு ஆணை வெளியிட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு சட்டம் வேலைவாய்ப்பு உட்பட அனைத்து துறைகளிலும் முறையாக செயல்படுத்த வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பணி ஓய்வு வயதை 65 ஆக உயர்த்த சிறப்பு ஆணை வெளியிட வேண்டும்.

பிரெய்ல் எழுத்து முறையை உருவாக்கிய பிரெஞ்சுக்காரரான லூயிஸ் பிரெய்ல் க்கு சென்னையில் சிலையை நிறுவுவதற்கான பொது இடத்தை அரசு வழங்க வேண்டும்.

என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி அனைத்து இந்திய லூயிஸ் பிரெய்ல் பார்வையற்றோர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேட்டி: 

முருகேசன். தலைவர், அனைத்து இந்திய லூயிஸ் பிரெய்ல் பார்வையற்றோர் சங்கம்.

District News